நாளை முதல் இரவு 10 மணி வரை கடைகள் திறக்க அனுமதி வழங்கப்படுகிறது என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் எதிர்வரும் பண்டிகை காலத்தை கருத்தில் கொண்டும், பொருளாதாரத்தை மேலும் மீட்டெடுக்க வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டும், நோய்த்தொற்றின் தன்மையை கருத்தில் கொண்டும், தமிழ்நாடு முழுவதும் முழு கட்டுப்பாட்டு பகுதி தவிர மற்ற பகுதிகளில் அரசால் ஏற்கனவே வெளியிடப்பட்ட நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி காய்கறி கடைகள், மளிகை கடைகள், உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகள் உள்ளிட்ட […]
திருச்சியில் ஜவுளி கடையில் ஜஃபிரா எனும் பெண் ரோபோ. தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி ,இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும், தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், திருச்சியில் செயல்படும் ஜவுளிக்கடையில் வாடிக்கையாளர்களின் உடல்வெப்பநிலையை அறியவும், வாடிக்கையாளர்கள் முகக்கவசம் அணிந்து வருவதை உறுதி செய்யவும், கடைக்கு எத்தனை பேர் வந்துள்ளனர் என்பதை அறியவும் ஜஃபிரா எனும் பெண் ரோபோவை அறிமுகப்படுத்தி […]
கடைக்கு நடுவே குடையால் மூடப்பட்ட நிலையில் சடலம். பிரேசிலில் உள்ள மிக பிரபலமான உள்ளூர் நிறுவனங்களில் ஒன்று கேரிஃபோர் என்ற நிறுவனம். இந்த நிறுவனத்தின் துணை நிறுவனம் ஒன்றில், இறந்த நபரின் சடலத்தை கடைக்கு நடுவே குடையால் மறைத்து வைத்து, அவரது உடலை அகற்றாமல், கடையையும் மூடாமல் விற்பனை செய்து வந்துள்ளனர். இதுகுறித்து சமூக ஊடகங்களில் விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில், கேரிஃபோர் தந்த அறிக்கையின்படி அந்த நபர் விற்பனை மேலாளராக பணிபுரிந்து வந்துள்ளார். அவர் கடைக்குள் […]
புதுச்சேரி பேரிடா் மேலாண்மை ஆணையம் சாா்பில் கொரோனா கட்டுப்படுத்துவது ஆலோசனைக் கூட்டம் முதல்வர் நாராயணசாமி தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமைச்சர்கள், தலைமைச் செயலர் மற்றும் பல்வேறு துறை செயலர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்திற்கு பின்னர் பேசிய முதல்வர் நாராயணசாமி புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிப்புக்கு சென்னை,வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து வருவோர்தான். இதனால், எல்லைகள் மூடப்பட்டுள்ளன. கொரோனா பரவி வரும் நிலையில் முகக்கவசம் அணியாமல் வெளியில் சுற்றினால் ஏற்கெனவே ரூ.100 அபராதம் விதிக்கப்படுகிறது. […]
திருவள்ளூர் மாவட்டத்தில் இந்த மூன்று நாட்கள் கடைகள் மூடல். தமிழகத்தில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் இந்த கொரோனா வைரசால், தமிழகத்தில் 36,841 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 326 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிற நிலையில், அங்கு வாரத்தில் திங்கள், புதன் மற்றும் வெள்ளி ஆகிய மூன்று நாட்கள் கடைகளை மூட […]
தஞ்சாவூர் மாவட்டத்தில் வட மாநிலத்தவர்களின் கடைகளுக்கு பூட்டுப் போட்டு அதில் தமிழகத்தை விட்டு வெளியேற வலியுறுத்தும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதில் தமிழ் தேசியக் கட்சி பெயரில் வட மாநிலத்தவருக்கு எதிரான எச்சரிக்கை போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. தமிழகம் முழுவதும் பல இடங்களில் வெளிமாநிலத்திலிருந்து வந்து இங்கு கடைகள் வைத்து, தொழில் புரியும் பலரும் இருக்கின்றனர். அந்த நிலையில் வட மாநிலத்தவர்கள் அவர்களது கடைகளை பூட்டி சென்ற பிறகு, இரவோடு இரவாக சில நபர்கள் பூட்டுக்கு மேல் பூட்டுப் போட்டு ,அதில் […]