துப்பாக்கிசூடு போட்டியில் தங்க பதக்கம் வென்ற நடிகர் அஜிகுமாருக்கு வாழ்த்துக்களை தெரிவித்த துணை முதல்வர் ஓ.பன்னீசெல்வம். சென்னையில் 46வது தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி மார்ச் 2ம் தேதி முதல் தொடங்கி 7ம் தேதி வரை நடைபெற்றது. இந்த போட்டியில் சுமார் 900க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இதில் சென்னை ரைஃபிள் கிளப் அணி பல்வேறு பதக்கங்களைக் குவித்தது. சென்னை ரைஃபிள் கிளப்பின் உறுப்பினரான நடிகர் அஜித்குமார் தங்கம் பதக்கம் உள்ளிட்ட 6 பதக்கங்களை வென்றார். […]