பீகார் மாநிலம் பெகுசராய் நகரில் உள்ள மாலிப்பூர் சௌக் எனும் பகுதியில் உள்ள கடை தெருவில் நேற்று (புதன்கிழமை) மாலை திடீரென துப்பாக்கி சூடு நடைபெற்றது. நேற்று மாலிப்பூர் சௌக் பகுதி கடைவீதியில் இரண்டு பைக்குகளில் வந்த மர்ம நபர்கள் திடீரனெ தாங்கள் கொண்டுவந்த துப்பாக்கிகளால் மக்களை நோக்கி சுட ஆரம்பித்தனர். இதில் மக்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். அப்போது சந்தன் குமார் எனும் 30வது நபர் உயிரிழந்தார். இதில் இடிபாடுகளில் சிக்கி 11 பேர் காயமுற்றனர். […]
இரு தரப்பினர் மோதலை கட்டுப்படுத்த வானத்தை நோக்கி போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். புதுக்கோட்டை போசம்பட்டியில் பகுதியில் முன்விரோத காரணாமாக ஒரே சமூகத்தை சேர்ந்த இரு பிரிவினர் மோதிக்கொண்டனர் அப்போது 2 பேர் காயம் என தகவல் வெளியாகிவுள்ளது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த புதுக்கோட்டை மாவட்ட கண்காணிப்பாளர் இரு தரப்பினர் சமாதானப்படுத்தி கலைந்து செல்லுமாறு கேட்டுக்கொண்டார. பின்னர் யாரும் களைந்து செல்லாததால் போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர் என்று தெரிய வந்துள்ளது.