சென்னை: தமிழக உள்துறை செயலாளராக பொறுப்பில் இருந்த அமுதா ஐஏஎஸ் அவர்களை இடமாற்றம் செய்து புதிய உள்துறை செயலாளராக தீராஜ்குமாரை தமிழக அரசு நியமனம் செய்தது. அமுதா ஐஏஎஸ் உட்பட தமிழகத்தில் 10 மாவட்ட ஆட்சியர் என மொத்தம் 15 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து அவர்களுக்கு பதிலாக புதிய ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்து தமிழக தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா உத்தரவு பிறப்பித்துள்ளார். 10 புதிய மாவட்ட ஆட்சியர்களின் விவரங்கள்… ராணிப்பேட்டை ஆட்சியராக J.U.சந்திரலேகா […]
சென்னை: தமிழக உள்துறை செயலாளராக பொறுப்பில் இருந்த அமுதா ஐஏஎஸ் தற்போது இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவர் வருவாய் மற்றும் பேரிடர் துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். புதிய தமிழக உள்துறை செயலாளராக தீராஜ்குமார் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த உத்தரவை தமிழக உள்துறை செயலாளர் சிவதாஸ் மீனா பிறப்பித்துள்ளார். மேலும் 10 மாவட்ட ஆட்சியர்கள் உட்பட 15 ஐஏஎஸ் அதிகரிகளும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை: கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவத்தில் பலர் அருந்திய விஷ சாராயத்தில் 8.6 சதவீதம் முதல் 29.7 சதவீதம் அளவுக்கு மெத்தனால் இருந்ததாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவத்தில் 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிகழ்வு நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. பல்வேறு அரசியல் கட்சியினர் இந்த சம்பவம் குறித்து தங்கள் கண்டனங்களை பதிவு செய்தனர். இந்த வழக்கை சிபிஐ விசாரணை செய்ய வேண்டும் என்று அதிமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. இந்த […]
கடந்த டிசம்பர் 17, 18 ஆகிய தேதிகளில் தென்மாவட்டத்தில் பெய்த கனமழையால் தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்ட மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டனர். குறிப்பாக தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், அதன் வழித்தடத்தில் உள்ள நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பி இரு மாவட்டத்திலும் பல்வேறு ஊர்களில் வெள்ளநீர் புகுந்தது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணிகள் கடந்த 6 நாட்களாக தொடர்ந்து வருகிறது. இன்னும் பல்வேறு இடங்களில் மீட்பு பணிகள் தொடர்ந்து வருகின்றன. மக்கள் பிரதிநிதிகள் பலர் களத்தில் நின்று மீட்பு […]
கடந்த ஞாயிற்று கிழமை முதல் திருநெல்வேலி , தூத்துக்குடி, கன்னியாகுமரி , தென்காசி ஆகிய மாவட்டங்களில் பெய்த வரலாறு காணாத கனமழை காரணமாக இதுவரை வெள்ளம் தேங்காத பகுதிகளில் எல்லாம் மழைநீர் தேங்கி உள்ளது. குறிப்பாக திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டம் வெள்ளத்தால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதியில் மக்கள் உணவும், தண்ணீர் இன்றி தவிக்கின்றனர். மேலும், மூன்று நாட்களுக்கும் மேலாக மின்சரம் இல்லாமல் இருளில் வசித்து வரும் நிலையில், தூத்துக்குடி, நெல்லை உட்பட 4 […]
குமரி கடல், அதை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி காரணமாக திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடியில் கனமழை பெய்து வருகிறது. அதன்படி, தென் தமிழகத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடியில் வரலாறு காணாத கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இன்றும் தென் தமிழகத்தில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில், தாழ்வான பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதில், குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடரும் […]
வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகனமழையை கொடுத்தது. இதன் காரணமாக நீர்நிலைகள் நிரம்பி சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் பல்வேறு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தது. குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளதால் அதனை வெளியேற்றும் வேலைகளிலும் , அங்குள்ள மக்களை மீட்கும் வேலைகளிலும் மீட்புப்படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். விஜயவாடாவில் இருந்து 5 குழுக்கள் தமிழகம் வருகை.. மீட்பு, நிவாரணத்துக்கான உதவி எண்கள் அறிவிப்பு! மழைநீர் வெளியேற்றம் குறித்தும் , மீட்பு பணிகள் […]
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பாதிக்கப்பட்டுள்ளது. இதில் குறிப்பாக சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் அதி கனமழை கொட்டி தீர்த்தத்தால் பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. சில இடங்களில் மழைநீர் வடிந்த நிலையில், பல இடங்களில் மழைநீர் இன்னும் வடியாமல் உள்ளது. புயல் சென்னை விட்டு விலகி சென்றதால் மழை சற்று குறைந்துள்ளது. மறுபக்கம் மிக்ஜாம் புயல் மீட்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் சென்று […]