கர்நாடகா காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமாருக்கு கொரோனா தொற்று உறுதி. கர்நாடகாவின் காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமாருக்கு இன்று கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். இந்த சோதனை முடிவில் டி.கே.சிவகுமாருக்கு கொரோனா இருப்பது உறுதியானதை அடுத்து இவர் பெங்களூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிவகுமாருக்கு முன், முதலமைச்சர் எடியூரப்பா மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா ஆகியோருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்தது. ஆனால் தற்போது அவர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான டி .கே சிவகுமார் சட்டவிரோதமாக பணமாற்றம் வழக்கில் அமலாக்கத்துறை சார்பில் கைது செய்யப்பட்டார். கைது செய்ய ப்பட்ட டி .கே சிவகுமார் திஹார் சிறையில் அடைத்து வைத்திருந்தனர்.இவரது ஜாமீன் மனுவை சிறப்பு நீதிமன்றம் நிராகரித்தது. இதைத்தொடர்ந்து அவர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்தார். இதை தொடர்ந்து கடந்த 23-ம் தேதி சிவகுமாருக்கு நிபந்தனை ஜாமீன் டெல்லி உயர்நீதிமன்றம் வழங்கியது. 50 நாள்கள் சிறையில் இருந்த பின் ஜாமினில் வெளியான […]
கர்நாடகா அரசியல் களம் தற்போது பரபரப்பாக இயங்கி வருகிறது. காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியை சார்ந்த எம்.எல்.ஏக்கள் 16 பேர் தங்களது ராஜினாமாவை அளித்தனர்.இதனால் ஆளும் அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. இதனால் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் ராஜினாமா செய்த எம்.எல்.ஏக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் ராஜினாமா செய்த எம்.எல்.ஏக்களில் ஒருவரான நாகராஜ் என்பவரை காங்கிரஸ் மூத்த தலைவரும்,கர்நாடக மாநிலத்தின் நீர்வளத்துறை அமைச்சருமான சிவக்குமார் சந்தித்து பேசினார். […]