மக்களவை தேர்தல் : 543 லோக்சபா இடங்களுக்கான முடிவுகளை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக இணையதளத்தில் அறிவித்துள்ளது. இதில், பாஜக 240 இடங்களையும், காங்கிரஸ் 99 இடங்களை கைப்பற்றியுள்ளது. இதனிடையே, மும்பை வடமேற்குத் தொகுதியில் போட்டியிட்ட ஏக்நாத் சிண்டேவின் சிவசேனா பிரிவு வேட்பாளர் ரவீந்திர வைகருக்கு 4,52,644 வாக்குகள் கிடைத்தன. அவருக்கு அடுத்து உத்தவ் தாக்கரேயின் சிவசேனா அணி வேட்பாளர் அமோல் கஜனன் கிர்திகாருக்கு 4,52,596 வாக்குகள் கிடைத்தன. இதன்மூலம், வைகர் 48 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். […]
Maharashtra : மகாராஷ்டிரா மாநிலத்தில் இந்தியா கூட்டணி கட்சிக்குள் மக்களவைத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீட்டில் உடன்பாடு எட்டியுள்ளது. மக்களவை தேர்தலுக்கான அட்டவணை இம்மாதம் வெளியாக உள்ள நிலையில், தேசிய கட்சிகளான பாஜக, காங்கிரஸ் தீவிரமாக செய்யப்பட்டு வருகிறது. ஒருபக்கம் மக்களவை தேர்தலுக்கான பாஜகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ள நிலையில், மறுபக்கம் மகாராஷ்டிராவில் இந்தியா கூட்டணி கட்சிகளின் இடையே தொகுதி பங்கீடு இறுதியாகியுள்ளது. Read More – பாஜகவில் இணைவது குறித்த […]
மகாராஷ்டிராவில் கொரோனா காலத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு கிச்சடி விநியோகம் செய்ததில் நடந்த முறைகேடு தொடர்பான பணமோசடி வழக்கில் உத்தவ் தாக்ரே தலைமையிலான சிவசேனா (யுபிடி பிரிவு) எம்பி சஞ்சய் ராவத்தின், இளைய சகோதரர் சந்தீப் ராவத்துக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. கொரோனா காலத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ‘கிச்சடி’ வழங்குவதற்காக பிரஹன்மும்பை முனிசிபல் கார்ப்பரேஷன் (பிஎம்சி) ஒப்பந்தங்களை வழங்கியபோது முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படுகிறது. அதன்படி, சஹ்யாத்ரி ரெஃப்ரெஷ்மென்ட் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது. இந்த நிறுவனம் அந்தந்த இடங்களுக்கு ‘கிச்சடி’ […]
மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் சிவசேனா கட்சி, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சியை கைப்பற்றின. இதில் உத்தவ் தாக்கரே முதல்வராக பொறுப்பேற்றார். இரண்டரை ஆண்டுகள் கடந்த இந்த ஆட்சியில், அடுத்ததாக ஏக்நாத் ஷிண்டே தலைமையில் பெரும்பான்மை எம்.எல்.ஏக்கள் உத்தவ் தாக்கரேவுக்கு வழங்கிய தங்கள் ஆதரவை வாபஸ் பெற்றனர். இதனை அடுத்து உத்தவ் தாக்கரே தனது பதவியை ராஜினாமா செய்யும் சூழல் ஏற்பட்டது. இந்த அரசியல் […]
மகாராஷ்டிரா இடைத்தேர்தலுக்காக, முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையான அணியினர் தேர்தல் சின்னமாக அரசமரம், வாள், சூரியன் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுக்க விருப்பம் தெரிவித்துள்ளனர். சிவசேனா ஆட்சிபுரியும் மகாராஷ்டிரா மாநிலத்தில் உத்தவ் தாக்கரே தலைமையிலான ஆட்சி நடைபெற்று வந்த வேளையில், உள்கட்சி பிரச்சனை காரணமாக ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான எம்.எல்.ஏக்கள் ஒன்றிணைந்து பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை கைப்பற்றினர். ஏக்நாத் ஷிண்டே முதல்வராக மாறினார். தற்போது அந்தேரி கிழக்கு பகுதியில் நவம்பர் 3ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற […]
மஹாராஷ்டிராவில் புதிய முதல்வர் ஏக்நாத் ஷிண்டேதலைமையில் 18 எம்.எல்.ஏக்கள் புதிய அமைச்சர்களாக பொறுப்பேற்கின்றனர். மஹாராஷ்டிராவில் தற்போது ஏகப்பட்ட அரசியல் அதிரடி நகர்வுகள் சினிமாவை மிஞ்சும் அளவுக்கு நடைபெற்று சற்று ஓய்ந்துள்ளது என்றே கூறவேண்டும். சிவ சேனா கட்சி இரண்டாக பிரிந்து இதற்கு முன்னர் முதல்வராக இருந்த உத்தவ் தாக்கரே மற்றும், ஏக்நாத் ஷிண்டே என அணிகளாக மாறியது. இதில் ஏக்நாத் ஷிண்டே தனது ஆதரவாளர்களுடன், பாஜக எம்.எல்.ஏக்களுடன் கூட்டணி அமைந்து மஹாராஷ்டிராவில் ஆட்சியை கைப்பற்றினார். மஹாராஷ்டிரா புதிய […]
மும்பையில் குடிசை பகுதிகளை மாற்றும் திட்டத்தில் சுமார் 1034 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக சிவசேனா கட்சி முக்கிய தலைவர் சஞ்சய் ராவத் மீது அமலாக்கத்துறை குற்றம் சட்டி இருந்தது. இதனை அடுத்து, அவரை 8 நாள் நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் கோரியிருந்தது. 8 நாள் முடியாது என 4 நாட்கள் மட்டும் நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்தது. தற்போது அமலாக்கத்துறை விசாரணையில் சஞ்சய் ராவத் கைது […]
ஜனாதிபதி தேர்தலில் பாஜக கூட்டணி வேட்பாளர் திரௌபதி முர்முவை சிவசேனா ஆதரிக்கும் என அக்கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார். சிவசேனாவின் எம்பியும் செய்தித் தொடர்பாளருமான சஞ்சய் ராவத் “திரௌபதி முர்முவை ஆதரிப்பது என்பது பாஜகவை ஆதரிப்பதாக அர்த்தமில்லை” என்று கூறியிருந்தார். அதன் பின்னர் இந்த ஆதரவு நிலைபாட்டை சிவசேனா எடுத்துள்ளது. எதிர்க்கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹாவுடன் சேனா “நல்ல உறவை” பகிர்ந்து கொண்டது என்றும் ஆனால் “அழுத்தத்தின் கீழ்” செயல்படாது என்றும் அவர் கூறினார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக அமைச்சர் ஏக்நாத் சிண்டே உள்ளிட்ட 35-க்கும் மேற்பட்ட அதிருப்தி எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.இதனைத் தொடர்ந்து, மகாராஷ்டிராவில் சிவசேனா தலைமையிலான கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவையும் வாபஸ் பெறுவதாக அதிருப்தி எம்எல்ஏக்கள் அறிவித்தனர். இதனால்,மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே நாளை மாலை 5 மணிக்குள் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க அம்மாநில ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில், மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவையில் முதல்வர் உத்தவ் தாக்கரே நாளை பெரும்பான்மையை […]
மகாராஷ்டிராவில் தியேட்டர்களை திறக்க தேவையில்லை,ஏனெனில், மக்களுக்கு பாஜக “பொழுதுபோக்கு” வழங்குகிறதாக சிவசேனா எம்பி சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, மாநிலத்தில் உள்ள சினிமா அரங்குகள் மற்றும் நாடக அரங்குகள் அக்டோபர் 22 ஆம் தேதி முதல் செயல்பட அனுமதிக்கப்படும் என்று கூறி, கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க தேவையான அனைத்து நெறிமுறைகளையும் பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில்,சிவசேனா எம்பி சஞ்சய் ராவத்,மகாராஷ்டிராவில் எதிர்க்கட்சியான பாஜக அனைத்து வரம்புகளையும் தாண்டிவிட்டது என்று பிடிஐயிடம் […]
உத்தரபிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் 403 தொகுதிகளிலும் சிவசேனா தனது வேட்பாளர்களை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. மகாராஷ்டிராவில் ஆட்சியில் இருக்கும் சிவசேனா உ.பி.யில் உள்ள 403 தொகுதிகளிலும் போட்டியிடப் போவதாக பெரிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் எந்த அரசியல் கட்சியுடன் கூட்டணி அமைக்கபோவது பற்றி சிவசேனா இதுவரை கூறவில்லை. மகாராஷ்டிராவில் காங்கிரஸ் தனது கூட்டணியில் இருப்பதால் காங்கிரஸ் உடன் கூட்டணிக்கு சிவசேனா தயாராக இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. நேற்று முன்தினம் லக்னோவில் சிவசேனாவின் மாநில நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. […]
கழிவுநீர் சுத்தம் செய்ய தவறிய ஒப்பந்ததாரர் தலையில் எம்.எல்.ஏ. ஆதரவாளர்கள் குப்பை கொட்டிய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மும்பையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணத்தால் பல்வேறு பகுதிகளில் மழைநீரோடு கழிவுநீரும் சேர்ந்துள்ளது. இதன் காரணத்தால் மும்பை கண்டிவாலா தொகுதியை சேர்ந்த மக்கள் சிவசேனை சட்டப்பேரவை எம்.எல்.ஏ. திலீப் லண்டேவிடம் புகார் அளித்துள்ளனர். இதனால் எம்.எல்.ஏ. திலீப் லண்டே கழிவுநீர் சுத்தம் செய்யும் ஒப்பந்ததாரரை கழிவுநீரில் அமர வைத்துள்ளார். மேலும், அவரது […]
பெட்ரோல் டீசல், விலை உயர்வு பிரச்சனைக்கு தீர்வு முடியாமல் தர்மசங்கடமாக இருக்கிறது என்று கூறுவதற்கு பதில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பதவி விலகலாம் என சிவசேனா எம்.பி சஞ்சய் அவர்கள் கூறியுள்ளார். நாடு முழுவதிலும் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து பல தலைவர்களும் குரலெழுப்பி வரும் நிலையில், மக்களும் இதற்கு எதிராக பேசிக்கொண்டுதான் இருக்கின்றனர். இந்நிலையில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அவர்கள் அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின்பு […]
கவர்னர் மாளிகையின் கவுரவத்தை காப்பாற்ற கவர்னர் பகத்சிங் கோஷ்யாரியை திரும்ப பெற்றுக்கொள்ளுங்கள் என்று பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு சிவசேனா கோரிக்கை விடுத்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் இணைந்து கூட்டணி ஆட்சியை நடத்தி வருகிறது. கொரோனா பரவல் காரணமாக மாநிலத்தில் வழிபாட்டு தலங்கள் மூடப்பட்டுள்ளது.இந்நிலையில் கோவில்களை திறக்கக்கோரி பாஜக போராட்டம் நடத்தி வந்தது. இந்நிலையில் கோவில்களை திறக்கும் விவகாரத்தில் முதலமைச்சர் உத்தவ் தாக்கரேக்கு கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி கடந்த திங்களன்று கடிதம் […]
பீகார் சட்டசபை தேர்தலில் சிவசேனா சுமார் 50 தொகுதிகளில் போட்டியிடும் என அக்கட்சியை சேர்ந்த மூத்த தலைவர் அனில் தேசாய் எம்.பி. கூறியுள்ளார். பீகார் மாநில சட்டசபை தேர்தல் அக்.,28 முதல் நவ.,3, 7 ஆகிய தேதிகளில் நடைபெறகிறது.243 தொகுதிகளை கொண்ட பீகார் மாநிலத்திற்கு 3 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் போட்டியிடப் போவதாக சிவசேனா கட்சி அறிவித்தது.மேலும் தேர்தல் பிரச்சாரத்தில் மகராஷ்ரா முதலவர் உத்தவ் தாக்கரே மற்றும் அவரது மகனும், […]
திங்கள், செய்வாய் கிழமைகளில் மும்பையில் மது விற்றதால் அரசுக்கு சுமார் 65 கோடி வருமானம் கிடைத்தது. அதே போல மும்பையில் 635 பேருக்கு கொரோனாவும் உறுதியானது. நாடு முழுவதும் கொரோனா முன்னெச்செரிக்கைக்காக 3ஆம் கட்டமாக மே 17வரையில் விதிக்கப்பட்டிருந்த ஊரடங்கில் சில தளர்வுகள் கொண்டுவரப்பட்டன. இதனால், சில மாநிலங்களில் விதிமுறைகளுக்குட்பட்டு தடை செய்யப்பட்ட பகுதிகளை தவிர மதுக்கடைகள் திறக்கப்பட்டன. மஹாராஷ்டிரா மாநிலத்திலும், மதுக்கடைகள் திறக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக கொரோனா அதிகம் பாதித்த மும்பையிலும் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. அங்கு திங்கள், […]
மகாராஷ்டிராவில் கடந்த சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தின் போது சிவசேனா கட்சி ரூ.10-க்கு மதிய உணவு திட்டம் அமல்படுத்தப்படும் என கூறியது. நேற்று குடியரசு தினத்தையொட்டி வாக்குறுதி அளித்து இருந்த ரூ.10-க்கு மதிய உணவு திட்டத்தை சிவசேனா அமல்படுத்தியது. மகாராஷ்டிராவில் கடந்த சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தின் போது சிவசேனா கட்சி ரூ.10-க்கு மதிய உணவு திட்டம் அமல்படுத்தப்படும் என கூறியது.இதைதொடர்ந்து நடைபெற்ற சட்டசபை தேர்தலில் சிவசேனா கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்தது. நேற்று நாடு முழுவதும் குடியரசு தினம் […]
சமீபத்தில் 2019-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதி வரை விவசாயிகள் வாங்கிய ரூ.2 லட்சம் வரையிலான பயிர் கடன்களை தள்ளுபடி என உத்தவ் தாக்கரே அறிவித்தார். நேற்று புனேயில் நடைபெற்ற நிகழ்ச்சி உத்தவ் தாக்கரே, விவசாயக் கடன் முழுவதையும் தள்ளுபடி செய்வதற்கான பணிகளை அரசு மேற்கொண்டு வருகிறது என கூறினார். மஹாராஷ்டிராவில் தற்போது சிவசேனா காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி கூட்டணியில் முதலமைச்சராக பதவியேற்று உள்ளார். சமீபத்தில் நடந்த குளிர்கால சட்டசபை கூட்டத்தில் பயிர்க்கடன் தள்ளுபடியை […]
ஜார்கண்டில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் – ஜே.எம்.எம் கூட்டணி வெற்றிபெற்று ஆட்சியை பிடித்தது. பாஜக இந்த தேர்தலில் தோல்வி அடைந்தது. இது குறித்து சிவசேனா பத்திரிக்கை கட்டுரை எழுதியுள்ளது. நடந்து முடிந்த ஜார்கண்ட் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் – ஜே.எம்.எம் கூட்டணி 47 இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடித்து. தனித்து போட்டியிட்ட பாஜக 25 தொகுதிகளை வென்று தோல்வியடைந்தது. வரும் 29ஆம் தேதி ஜே.எம்.எம் கட்சி தலைவர் ஹேமந்த் சோரன் முதல்வராக பொறுப்பேற்க உள்ளார். ஜார்கண்டில் […]
இன்று காலை சட்டசபைக்கு வந்த பாஜக எம்.எல்.ஏ.க்கள் விவசாயிகளுக்கு ரூ.25 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்ற பதாகைகளுடன் அவைக்கு வந்தனர். இதை தொடர்ந்து இருதரப்பினருக்கும் இடையிலும் கைகலப்பு ஏற்படும் சூழல் இருந்ததால் சட்டசபை அரைமணி நேரம் சபாநாயகர் ஒத்திவைத்தார். மகாராஷ்டிரா மாநிலத்தில் பெய்த கனமழை காரணமாக பல லட்சம் ஹெக்டேர் நிலத்தில் இருந்த பயிர்கள் அழிந்தன.இதனால் பல ஆயிரம் கோடி ரூபாய் ஏற்பட்டன. எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஒரு ஹெக்டேருக்கு ரூ .25 ஆயிரம் இழப்பீடாக […]