நாகையில் இருந்து புறப்பட்ட செரியபாணி பயணிகள் கப்பல் இலங்கை காங்கேசன்துறைக்கு சென்றடைந்தது. நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்துக்கு பயணிகள் சொகுசு கப்பல் போக்குவரத்து சேவை இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. அக்.12ல் தொடங்கவிருந்த கப்பல் போக்குவரத்துக்கு, நிர்வாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று தொடங்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்குப் பிறகு நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கைக்கு செல்லும் பயணிகள் கப்பல் சேவை இன்று தொடங்கியுள்ளது. நாகை துறைமுகத்திற்கு அக்.7ம் தேதி சொகுசு கப்பல் வந்தடைந்த நிலையில், அக்.9ல் […]
நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்துக்கு பயணிகள் சொகுசு கப்பல் போக்குவரத்து சேவை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இவ்விழாவில் மத்திய துறைமுகம் மற்றும் நீர்வழிப்பாதை துறை அமைச்சர் சர்பானந்தா சோனாவால், தமிழக அமைச்சர்கள் ரகுபதி, எ.வ.வேலு, நாகை எம்.பி. செல்வராஜ் ஆகியோர் பங்கேற்று, சொகுசு கப்பல் போக்குவரத்து சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தனர். மத்திய அமைச்சர் ஜெய்சங்கர், இலங்கை துறைமுகங்கள் துறை அமைச்சர் காணொலி மூலம் பங்கேற்றனர். அக்.12ல் தொடங்கவிருந்த கப்பல் போக்குவரத்துக்கு, நிர்வாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்டிருந்த […]
அந்தமானை ஒட்டி உள்ள இந்திரா பாயிண்ட் பகுதியில் அத்துமீறி நுழைந்த ஈரானியர்கள் 11 பேர் கைது. இந்திய கடல் பகுதியில் கப்பலில் நுழைந்த ஈரானை சேர்ந்த 11 பேரை மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர். இந்திய கடல் எல்லைப் பகுதியான அந்தமானை ஒட்டி உள்ள இந்திரா பாயிண்ட் பகுதியில் அத்துமீறி நுழைந்ததாக கூறி ஈரானியர்கள் 11 பேரை போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர். கைதான 11 ஈரானியர்களுக்கு போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு […]
நார்வே நாட்டில் ‘Yara Birkeland’ எலெக்ட்ரிக் மற்றும் தானியங்கி கப்பல் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் காற்று மாசு அதிகரித்து வரும் நிலையில், புவி வெப்பமயமாதலை தடுக்கும் வண்ணமாகவும், பூமிக்கு மாசுபடுத்தகாத வகையில் கார்பன் புகையை வெளியேற்றாத மின்சார வாகனங்களின் பயன்பாடு உலகெங்கும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் தற்போது நார்வே நாட்டில் ‘Yara Birkeland’ எலெக்ட்ரிக் மற்றும் தானியங்கி கப்பல் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கப்பலை, பிரசித்தி பெற்ற நார்வே நாட்டு நிறுவனமான YARA இந்த […]
நைஜீரிய நாட்டின் வடமேற்கு கெப்பி மாநிலத்தில் இருந்து 180 பயணிகளுடன் சென்ற படகு கவிழ்ந்ததில், 4 பேர் உயிரிழந்துள்ளதுடன் 156 பேர் காணாமல் போயுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. நைஜீரிய நாட்டின் வடகிழக்கில் உள்ள கெப்பி மாநிலத்தில் இருந்து நைஜர் மாநிலத்தின் மலேலா நகரில் உள்ள சந்தைக்கு செல்வதற்காக படகு ஒன்று 180 பயணிகளுடன் புறப்பட்டுள்ளது. படகு புறப்பட்ட ஒரு மணி நேரத்தில் திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியதில், சம்பவ இடத்திலேயே 4 பேர் நீரில் மூழ்கி பலியாகி உள்ளனர். […]
நாடு முழுவதும் ஊரடங்கில் அடுத்தக்கட்ட தளர்வுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய அரசு பொது ஊரங்கினை நாடு முழுவதும் அமல்படுத்தியது.இந்நிலையில் கொரோனா ஊரடங்கு 6 மாதக் காலமாக நடைமுறை படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், அதில் சில தளர்வுகளை மத்திய அரசு அவ்வபோது அறிவித்து வருகிறது. அந்த வகையில், சர்வதேச பயணிகள் இந்தியாவில் நுழைய மத்திய அரசு பல கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. இந்நிலையில் இதில் கட்டுப்பாடுகள் சிலவற்றை தளர்த்தியுள்ளது. அதன்படி, மின்னனு விசா, சுற்றுலா […]
இலங்கை கடற்பகுதியில் தீப்பிடித்து எரிந்த எண்ணெய் கப்பலில் 79 மணிநேரம் மீட்புப் பணிகளுக்குப் பிறகு தீ அணைக்கப்பட்டது. இலங்கை பனாமா நாட்டில் பதிவு செய்யப்பட்ட நியூ டைமண்ட் எனும் எண்ணெய் கப்பல் குவைத்திலிருந்து இந்தியாவிற்கு 2 லட்சத்து 70 ஆயிரம் மெட்ரிக் டன் எடையுடன் வந்துள்ளது. அதில் 23 பிலிப்பைன்ஸ் மற்றும் கிரேக்க நாட்டை சேர்ந்த ஊழியர்கள் இருந்துள்ளனர். இந்த கப்பலின் எஞ்சின் அறையில் கொதிகலன் வெடித்ததால் கப்பல் தீப்பிடித்து எரிந்துள்ளது. தீ விபத்து ஏற்பட்டவுடன் தகவலின் […]
எண்ணெயை அகற்ற இந்தியாவின் உதவியை நாடிய மொரிசியஸ். ஜப்பானிய எண்ணை கப்பலான எம்.வி.வகாஷியோ, மொரிசியஸ் கடலில் சென்றபோது பவளப் பாறையில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கப்பலில் இருந்த 1,100 டன் கடலில் கொட்டியது. இதனை அகற்றுவதற்காக தற்போது மொரிசியஸ் இந்தியாவின் உதவியை நாடியுள்ளது. இது குறித்து கடலோர காவல்படை விடுத்துள்ள அறிக்கையில், இந்திய கடலோர காவல்படை மாசு கட்டுப்பாட்டு குழு மொரிசியஸ் உடன் இணைந்து பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் மற்றும் குழுக்களுடன் இணைந்து செயல்படப் போவதாக […]
அட்லாண்டிக் கடல் பகுதியில் இருந்த ஜப்பான் கார்னிவல் குரூஸ் கப்பலில் இதுவரை 150 பேருக்கு கொரோனா தொற்று உறுதி. முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ், தொடர்ந்து பல நாடுகளில் தனது கோர முகத்தை காட்டி வருகிறது. இந்த வைரஸை அழிக்க, உலக நாடுகள் தீவிரமான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை உலக அளவில், 2,833,903 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 197,359 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், அட்லாண்டிக் கடல் பகுதியில் இருந்த ஜப்பான் கார்னிவல் குரூஸ் கப்பலில் […]
ஜப்பான் துறைமுகத்திற்கு திரும்பிய டயமண்ட் பிரின்சஸ் கப்பலில் கொவிட்-19 வைரஸ் தொற்று காரணமாக, கப்பலில் உள்ள பயணிகளுக்கு 2,000 ஐபோன்களை ஜப்பான் அரசு இலவசமாக வழங்கியுள்ளது. ஹாங்காங் சென்று ஜப்பான் துறைமுகத்திற்கு திரும்பிய டயமண்ட் பிரின்சஸ் கப்பலில் 3,700 பயணிகள் இருக்கிறார்கள். அந்தக் கப்பலில் கொரானா தொற்றால் முதியவர் ஒருவர் பலியானது அதிர்ச்சியை அளித்தது. இதைத்தொடர்ந்து அந்த கப்பலில் 355 பேருக்கு கொரானா தொற்று இருப்பது உறுதி செய்த நிலையில், மேலும் 99 பேருக்கு புதிதாக இந்த […]
மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் ரூ.4,600 கோடி மதிப்புடைய சூப்பர் கப்பல் ஒன்றை வாங்க சமீபத்தில் ஆர்டர் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பிரமாண்டமான சூப்பர் சொகுசு கப்பல் முழுவதும் திரவ ஹைட்ரஜனால் இயங்கும் என கூறப்படுகிறது. மைக்ரோசாப்ட் நிறுவனரும் உலகின் பெரும் பணக்காரர்களின் ஒருவரான பில்கேட்ஸ், சுற்றுசூழல் பாதுகாப்புக்கும் மற்றும் பாதிப்பு ஏற்படுத்தாத முயற்சிகளுக்கு ஆதரவு அளிப்பது, உலகின் ஆரோக்கியத்தை மேம்படுத்த செயல்படும் நிறுவனங்களுக்கு நிதிஉதவி அளித்து உதவுவது உள்ளிட்ட செயல்களுக்காக தனது பணத்தை தாராளமாக செலவிட்டு […]
7000 பயணிகளுடன் கோஸ்டா சமரால்டா எனும் கப்பல் இத்தாலி துறைமுகத்தை வந்தடைந்தது. உடல்நலம் பாதிக்கப்பட்ட சீனாவை சேர்ந்த பெண்ணிற்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளதா என சந்தேகப்பட்டனர். இதனால் மருத்துவ பரிசோதனை முடியும் வரை 7000 பயணிகளும் கப்பலிலேயே தங்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. இத்தாலியில் உள்ள சிவிடவேசியாவில் எனும் துறைமுகத்தில் 6000 பயணிகள் உட்பட 1000 பணியாளர்களுடன் கோஸ்டா சமரால்டா என்ற கப்பல், வந்தடைந்தது. இந்த கப்பலில் சீனா, மக்காவு எனும் பகுதியை சேர்ந்த ஜோடிகள் […]
உலகில் பழமை வாய்ந்த கலாச்சாரமாக எகிப்தின் கலாச்சாரத்தை கூறப்படுகிறது.. தற்போது உள்ள எகிப்து நாட்டில் ஹெராக்லியான் என்ற இடத்தில் 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயில் கடலுக்கு அடியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் கடலுக்கு அடியில் கண்டுபிடிக்கப்பட்ட கோவில் உடன் நகைகள் மற்றும் நாயணங்கள் உள்ள ஒரு கப்பலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு பல கோடி ரூபாய் என கூறப்படுகிறது. இதேபோல் பழங்கால கட்டிடங்கள், மண்பாண்டங்கள் போன்றவைகளும் உள்ளனர்.இவை அனைத்தும் 2200 ஆண்டுகள் பழமையானவை என்று கூறப்படுகிறது. […]
டைட்டானிக் கப்பல்: ஆர்எம்எஸ் டைட்டானிக் (RMS Titanic) என்பது ஒரு ஆடம்பர பயணிகள் கப்பல் ஆகும். இது வட அயர்லாந்தில் பெல்பாஸ்ட் நகரில் உருவானது. 1912 இல் முதன் முதலாகச் சேவைக்கு விடப்பட்டபோது இதுவே உலகின் மிகப் பெரிய பயணிகள் நீராவிக் கப்பலாகும். டைட்டானிக் தனது முதற் பயணத்தின் போது ஏப்ரல் 14, 1912 இல் இரவு 11:40 மணிக்கு வட அட்லாண்ட்டிக் பெருங்கடலில் பனிப்பாறை ஒன்றுடன் மோதியது; மோதி 2 மணி 40 நிமிடங்களில் ஏப்ரல் 15, 1912 இல் முழுவதுமாக மூழ்கியது.டைட்டானிக் கடலில் மூழ்கியதில் அதில் பயணம் செய்த 1503 பேர் கொல்லப்பட்ட நிகழ்வு அமைதிக்காலத்தில் நடந்த மிகப்பெரும் கடல் அழிவாகக் கருதப்பட்டது. டைட்டானிக் கப்பல் அக்காலத்தில் […]