கர்நாடகாவின் மங்களூருவில் ஆட்டோ குண்டுவெடிப்புக்கு முன் முகமது ஷரீக், சிம்மோகாவில் ஒத்திகையில் ஈடுபட்டுள்ளது என்ஐஏ விசாரணையில் வெளிவந்துள்ளது. கடந்த சனிக்கிழமை அன்று கர்நாடக மாநிலம் மங்களூருவில் ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்ததில் ஆட்டோ ஓட்டுநர் மற்றும் உடன் இருந்த பயணி ஒருவர் என இருவர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதன் பின்னர், விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்களை போலீசார் வெளியிட்டனர். அதில், ஆட்டோ ஓட்டிவந்த முகமது ஷாரிக், கர்நாடக மாநிலம் சிவமோகா மாவட்டம் தீர்த்தஹள்ளி பகுதியை சேர்ந்தவர். […]