ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூல் நகரில், பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் சுமார் 26 பேர் பலியாகினர். மேலும் அத்தாக்குதலில் 18 பேர் காயமடைந்தனர்.ஆப்கன் புத்தாண்டான `நவ்ரஷ்` – ஐ கொண்டாட அந்நாட்டு பொதுமக்கள் நூற்றுக்கணக்கானோர் காபூல் நகரத்தில் திரண்டிருந்தனர். இந்த கூட்டத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. ஆப்கானிஸ்தானில் சிறுபான்மை எண்ணிக்கையில் இருக்கும் ஷியா பிரிவினரே, அதிகளவில் திரண்டிருந்தனர்.ஷகி திருத்தலத்தை நோக்கி நடந்து வந்த தற்கொலைப் படை பயங்கரவாதி, மக்கள் கூடியிருக்கும் பகுதிக்குள் வந்ததும் […]