ஷேக் முகமது பின் சயித் அல் நஹ்யானுக்கு போப் பாண்டவர் நன்றி தெரிவித்துள்ளார் ஐக்கிய அரபு அமீரகத்தில் பல்வேறு மதத் தலைவர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு தன்னை அழைத்ததற்காக அபுதாபி பட்டத்து இளவரசர் ஷேக் முகமது பின் சயித் அல் நஹ்யானுக்கு போப் பாண்டவர் நன்றி தெரிவித்துள்ளார். மேலும் அமீரகம் சகோதரத்துவம், கலாச்சார பரிவர்த்தனை, ஒத்துழைப்பு போன்றவற்றில் உலகுக்கு முன்மாதிரியாக திகழ்வதாகவும் வாழ்த்து தெரிவித்தார்.