பங்களாதேஷ் : கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி பிரதமர் பதவியையும் நாட்டையும் விட்டு வெளியேறிய வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக வங்காளதேசத்தில் இப்போது கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதாவது, வங்கதேசத்தில் நடந்த கலவரத்தில் கொல்லப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு தொடர்ந்த வழக்கில், ஷேக் ஹசீனாவை நவம்பர் 18-ல் நேரில் ஆஜர்படுத்த வங்கதேச குற்றவியல் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்நிலையில், ஹசீனாவின் அவாமி லீக் கட்சியின் தலைமறைவான முன்னாள் பொதுச் செயலாளர் ஒபைதுல் குவாடர் […]
வங்கதேசம் : இடஒதுக்கீடு , மாணவர்கள் போராட்டம் நூற்றுக்கணக்கானோர் உயிரிழப்புகளை தொடர்ந்து வங்கதேச பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்து இந்தியாவில் தற்காலிமாக தஞ்சம் அடைந்தது வரையில் அனைத்தும் தலைப்பு செய்திகளாக நமக்கு தெரிந்த கதையாகி உள்ளது. இந்தியாவில் தஞ்சம் : ஷேக் ஹசீனாவுக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவு அளிக்குமா என்பது சந்தேகமே. ஷேக் ஹசீனா அடுத்ததாக இங்கிலாந்து செல்ல உள்ளதாக கூறப்பட்ட நிலையில் , அந்நாட்டு சார்பாக வெளியான தகவலின் படி, […]
வங்கதேசம் : வங்கதேசத்தில் விடுதலை போரட்ட வீரர்களின் சந்ததிகளுக்கு இடஒதுக்கீடு அளிக்கும் சட்ட மசோதாவுக்கு எதிராக மாணவர்கள் நாடு முழுவதும் பெரும் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் உயிரிழந்தனர். பொதுச்சொத்துக்கள் பெருமளவு சேதமடைந்தன. பின்னர், இந்த இடஒதுக்கீடு சட்டத்தை அமல்படுத்தக்கூடாது என அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து அப்போது மாணவர்கள் போராட்டம் சற்று தணிந்தது. இதனை தொடர்ந்து சில தினங்களுக்கு முன்னர் மீண்டும் வங்கதேசத்தில் பல்வேறு இடங்களில் கலவரங்கள் வெடித்தன. இந்த கலவரத்தில் இதுவரை சுமார் […]
வங்கதேசம் : பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, பிரதமர் ஷேக் ஹசீனா, தனது சகோதரியுடன் நாட்டை விட்டு ஹெலிகாப்டரில் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த போராட்டத்தில் ஏற்கனவே 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 4) முதல் நடந்த புதிய போராட்டத்தில் கிட்டத்தட்ட 100 பேர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறிய, ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக அந்நாட்டு ஊடகம் […]
நமது அண்டை நாடான வங்காளதேசத்தில் மொத்தம் 350 நாடாளுமன்றத் தொகுதிகளில் 50 தொகுதிகளுக்கு அரசால் பெண் எம்.பி.க்கள் நியமிக்கப்படுவர். இதனால் மீதமுள்ள 300 தொகுதிகளுக்கு நேற்று தேர்தல் நடைபெற இருந்த நிலையில் ஒரு வேட்பாளர் உயிரிழந்ததால் மீதமுள்ள 299 தொகுதிகளுக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. அந்த ஒரு தொகுதிக்கான வாக்குப்பதிவு பின்னர் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. நேற்று காலை 8 மணிக்கு தேர்தல் தொடங்கி மாலை 5 மணிக்கு முடிவடைந்தது. மொத்தம் 42,000 க்கும் […]
பகலிரவு டெஸ்ட் போட்டியை காண வங்கதேச பிரதமர் சேக் ஹசீனா வருகிறார். வங்கதேச அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.தற்போது டெஸ்ட் போட்டி நடைபெற்று வரும் நிலையில் முதல் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.இதனை தொடர்ந்து நாளை இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது.நாளை நடைபெறும் டெஸ்ட் போட்டி வரலாற்று சிறப்பு மிக்க போட்டியாகும்.எப்படியென்றால் இந்த டெஸ்ட் போட்டி பகலிரவு டெஸ்ட் போட்டியாக நடைபெறுகிறது.இதற்காக பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த போட்டியில் பிங்க் […]