சென்னை- கோயம்புத்தூர் இடையே இயக்கி வந்த சதாப்தி விரைவு ரயில் சேவை பயணிகளிடம் போதிய வரவேற்பு இல்லாததால் நவம்பர் 30-ஆம் தேதியே இந்த ரயியின் கடைசி சேவையாக இருக்கும். டிசம்பர் 01-ஆம் தேதி முதல் சதாப்தி ரயில் சேவை நிறுத்தப்படுகிறது. செவ்வாய்க்கிழமையை தவிர வாரம் 6 நாள்களும் இயங்கி வந்த சதாப்தி ரயில் சேவை நிறுத்தப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.