“லால் சிங் சத்தா” படத்தின் மூலம் முதன் முறையாக இணையும் ‘கான்’ கள்!

லால் சிங் சத்தா படத்தின் மூலம் முதன் முறையாக அமீர்கானும் ஷாருக்கானுக்கு ஒன்றாக இணைந்து நடித்துள்ளனர்.

பாலிவுட் பிரபலங்களான அமீர்கான் மற்றும் ஷாருக்கான் இருவரும் ஒன்றாக இணைந்து எந்த படத்திலும் நடித்ததில்லை. இந்நிலையில், இயக்குனர் அத்வைத் சந்திரன் அவர்கள் இயக்கத்தில் தற்பொழுது அமீர்கான் லால் சிங் சத்தா எனும் படத்தில் நடித்து வருகிறார். கொரோனா பெருந்தொற்றால் பல்வேறு இடங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்த நிலையில் இந்தியா முழுவதிலும் மக்களின் வாழ்வாதாரம் கருதி கொடுக்கப்பட்டுள்ள தளர்வுகளில் ஒன்றாக சினிமா துறையினரும் கட்டுப்பாடுகளுடன் படப்பிடிப்பு செய்யலாம் என அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஷாருக்கான் லால் சிங் சத்தா எனும் படத்தில் அமீர்கானுக்காக ஒரு ரோலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் நடித்த காட்சிகளை மட்டும் அமீர்கான் தான் படமாக்கியுள்ளார். இந்த படத்தில் நடித்த பின்பு ஷாருக்கான் மற்றொரு படப்பிடிப்புக்காக டெல்லி சென்றுவிட்டாராம்.