வார தொடக்க நாளில் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 307 புள்ளிகள் உயர்ந்து 58,437 என்ற புதிய உச்சம் தொட்டது. இந்திய பங்குச் சந்தைகள் வார தொடக்க நாளான இன்று ஆரம்பத்திலேயே புதிய உச்சத்தை தொட்டுள்ளது. மும்பை பங்குசந்தை சென்செக்ஸ் குறியீட்டு எண் 307 புள்ளிகள் உயர்ந்து, 58,437 புள்ளிகளாக அதிகரித்து புதிய உச்சத்தை தொட்டு வர்த்தகம் செய்யப்படுகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 89 புள்ளிகள் அதிகரித்து, 17,413 புள்ளிகளாக காணப்படுகிறது.