உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஷரத் அரவிந்த் பாப்டே சென்ற விமானம் அவசரமாக கொல்கத்தா விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஷரத் அரவிந்த் பாப்டே கொல்கத்தாவிலிருந்து ஹைதராபாத் செல்லவிருந்த நிலையில், திடீர் தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவசரமாக அந்த விமானம் தரையிறக்கப்பட்டது. நேற்று புறப்படும் போது விமானத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளதை கண்டுபிக்கப்பட்டதால் உடனடியாக கொல்கத்தாவில் தரையிறக்கப்பட்டது. இதுகுறித்து கொல்கத்தா விமான நிலைய இயக்குனர் கூறுகையில், கொல்கத்தாவில் இருந்து ஹைதராபாத் செல்லவிருந்த ஏர் இந்தியா […]
உச்ச நீதிமன்றத்தின் 47-வது தலைமை நீதிபதியாக சரத் அரவிந்த் பாப்டே பதவியேற்றார். குடியரசுத் தலைவர் மாளிகையில் எஸ்.ஏ.பாப்டேவுக்கு ராம்நாத் கோவிந்த் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். தலைமை நீதிபதியாக பதவியேற்ற எஸ்.ஏ. பாப்டே 2021-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை பதவியில் நீடிப்பார். பாப்டே 21 ஆண்டுகள் வழக்கறிஞராக பணியாற்றினார்.பாப்டே 2013-ம் ஆண்டு உச்சநீதிமன்ற நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டார். பாப்டே உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்த போது அயோத்தி வழக்கு உள்ளிட்ட பல முக்கிய வழக்குகளை விசாரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.