மகாராஷ்டிரா மாநிலத்தில்,103 வயதாகும் ஷாம்ராவ் இங்க்லே என்ற முதியவர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மகாராஷ்டிராவின்,பால்கர் மாவட்டத்தில் உள்ள வீரேந்திர நகரைச் சேர்ந்த ஷாம்ராவ் இங்க்லே என்ற 103 வயதாகும் முதியவர்,சமீபத்தில் கொரோனா தொற்றுக்கு ஆளானதால் பால்கரில் உள்ள கிராமப்புற கொரோனா சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து,சிகிச்சை பெற்று வந்த முதியவர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து சனிக்கிழமை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதுகுறித்து,அம்மருத்துவமனையின் டாக்டர் ஒருவர் கூறுகையில், […]