டெல்லி : பயிர்களுக்கு ஆதார விலை (MSP) கோரிக்கையை முன்னிறுத்தி பஞ்சாப் மாநில விவசாயிகள் 101 பேர் அடங்கிய குழுவினர் இன்று தலைநகர் டெல்லி நோக்கி பேரணியாக புறப்படுவதாக முன்னர் அறிவித்து இருந்தனர். அதன்படி இன்று அவர்கள் ஹரியானா – டெல்லி மாநில எல்லையான ஷம்பு பகுதிக்கு வந்தனர். அவர்களை டெல்லி நோக்கி செல்ல விடாமல் போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளனர். அவர்கள் முன்னேறுவதை தடுக்க தடுப்புகள் அமைத்தும், கண்ணீர் புகை குண்டுகள் வீசியும் தடுத்தி நிறுத்தி வருகின்றனர். […]