கடைசி நேரத்தில் ஆஸ்திரேலியா விமானத்தை தவற விட்டதால் ஷிம்ரான் ஹெட்மயர், டி-20 உலககோப்பையிலிருந்து வெளியேறியுள்ளார். டி-20 உலகக்கோப்பை திருவிழா அக்-16 ஆம் தேதி ஆஸ்திரேலியாவில் தொடங்கவுள்ளது. இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணியைச் சேர்ந்த அதிரடி வீரர் ஷிம்ரான் ஹெட்மயர், ஆஸ்திரேலியா செல்லும் விமானத்தை தவற விட்டுள்ளதால் அவர் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். ஹெட்மயர், தனது குடும்ப சூழ்நிலை காரணமாக சனிக்கிழமை கிளம்ப வேண்டிய விமானத்திலிருந்து திங்கள் கிழமை மாற்றி தருமாறு அணி நிர்வாகத்திடம் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் நேற்று […]