உத்தரகாண்ட் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பகுகுணா தனது பேத்திக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தனது மருமகளால் குற்றம் சாட்டப்பட்டார்,இதனையடுத்து,ராஜேந்திர பகுகுணா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதனிடையே,தனது மாமியாருடன் நடந்து சென்றபோது தன்னை துஷ்பிரயோகம் செய்ததாகவும்,மிரட்டியதாகவும், தாக்கியதாகவும் அண்டை வீட்டாரான சவீதாவின் புகாரின் பேரில் முன்னாள் அமைச்சர் மீது மற்றொரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில்,தனது வீட்டின் மாடியில் தண்ணீர் தொட்டியின் மீது ஏறி துப்பாக்கியால் நெஞ்சில் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். […]