புதுக்கோட்டையில் மனநிலை பாதிக்கப்பட்ட சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் கீரனுர் அருகே பாலியல் குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2019-ஆம் ஆண்டு 17 வயது மனநலக்குன்றிய சிறுவனை காட்டுக்குள் அழைத்து சென்று பாலியல் ரீதியாக துன்புறுத்தி கொலை செய்த வழக்கில் வடமாநிலத்தை சேர்ந்த டேனிஷ் படேலுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குஜராத்தை சேர்ந்த டேனிஷ் படேல் என்பவருக்கு 3 பிரிவுகளின் கீழ் மரண தண்டனையும், […]