சிறார்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தரப்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டாலும், அதுபோன்ற கொடூர சம்பவங்கள் அரங்கேறிக் கொண்டுதான் உள்ளது. தலைநகர் டெல்லியில் பெண்கள், சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் சம்பவங்கள் அரங்கேறிய வண்ணம் உள்ளது. இந்நிலையில், மகராஷ்டிரா மாநிலம் புனேவில் 1 வயது பெண் குழந்தை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புனே நகரில் தமிழகத்தை சேர்ந்த ஒரு குடும்பம் கூலி வேலை செய்து வருகிறது. […]