உத்தரபிரதேசத்தின் கான்பூர் தேஹத் மாவட்டத்தில் பட்டியலின பெண் ஒருவரை முன்னாள் கிராமத் தலைவர் உள்ளிட்ட இரண்டு நபர்கள் துப்பாக்கி முனையில் பாலியல் வன்கொடுமை செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். மீண்டும் உ.பியில் ஒரு கொடூர சம்பவம் நடந்துள்ளது. இக்கொடூரம் நடந்து ஒரு வாரம் ஆன போதிலும் ஞாயிற்று கிழமை தான் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாக கான்பூர் தேஹாத் மாவட்ட போலீஸ் சூப்ரண் கேசவ் குமார் சவுத்ரி அதிர்ச்சி தெரிவித்தார். பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் அளித்த புகாரின் படி 22 […]