காஞ்சிபுரம் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் அத்திவரதரை சுவாமி தரிசனம் செய்தார். இதன் பின்னர் அவர் கூறுகையில், பொதுமக்களுக்கு கூடுதலாக அனைத்து வசதிகளையும் தடையின்றி சிறப்பாக ஏற்பாடு செய்ய உத்தரவிடப்பட்டது. அத்திவரதரை மீண்டும் பூமிக்கடியில் புதைக்க கூடாது என்ற ஜீயரின் பேச்சு குறித்த கேள்விக்கு பதில் கூறுகையில், முன்பு காலங்களில் ஆகம விதிப்படி எந்த நடைமுறை பின்பற்றப்பட்டதோ, அந்த வழிமுறையே தற்போதும் பின்பற்ற முடியும் என்று அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் பதில் அளித்தார்.