கொரோனா சிகிச்சைக்கு பயன்படும் கோவிஷீல்டு தடுப்பூசியின் விலையை உயர்த்தியது புனேவை தலைமையிடமாக கொண்டுள்ள சீரம் நிறுவனம். கொரோனா வைரஸ் தடுப்பூசியான கோவிஷீல்டின் விலை தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ.600 மற்றும் மாநில அரசுகளுக்கு ரூ.400 என உயர்த்தி சீரம் நிறுவனம் அறிவித்துள்ளது. ஏற்கனவே, ரூ.250-க்கு கோவிஷீல்டு தடுப்பூசி விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது அதன் விலை இருமடங்காக உயர்ந்துள்ளது. மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி விலை நிர்ணயிக்கப்பட்டிருப்பதாக கோவிஷீல்டு தடுப்பூசி தயாரிக்கும் சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனம் அறிவித்துள்ளது.
கொரோனா தடுப்பூசி டிசம்பர் மாதத்திற்குள் தயாராக வாய்ப்பு இருக்கிறது என்று சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு டிசம்பருக்குள் இந்தியாவின் கொரோனா வைரஸ் தடுப்பூசியான ‘கோவிஷீல்ட்’ கிடைக்கக்கூடும். ஆனால், தடுப்பூசிகள் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் பின்பு விற்பனைக்கு வரும் என்று சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா தெரிவித்துள்ளது. மேலும், மார்ச் 2021 க்குள் இந்தியாவுக்கு 60-70 மில்லியன் டோஸ் கோவிஷீல்ட் கொரோனா வைரஸ் தடுப்பூசி கிடைக்கும் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான, உரிமம் பெறுவதற்கு டிசம்பர் […]