நான் இன்னும் டென்னிஸிலிருந்து ஓய்வு பெறவில்லை செரீனா வில்லியம்ஸ் அதிரடி

23 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான செரீனா வில்லியம்ஸ் தான் இன்னும் டென்னிஸிலிருந்து ஓய்வு பெறவில்லை கூறியுள்ளார். திங்களன்று செரீனா வில்லியம்ஸ், தான் டென்னிஸிலிருந்து ஓய்வு பெறவில்லை என்றும், கடந்த மாதம் நடந்த யுஎஸ் ஓபனுக்குப் பிறகு விளையாட்டிலிருந்து விலகப் போவதாகக் கூறியதைத் தொடர்ந்து, அவர் திரும்புவதற்கான வாய்ப்புகள் “மிக அதிகம்” என்று கூறியுள்ளார். தான் என்ன செய்கிறேன் என்பதை விவரிக்க சிறந்த வார்த்தை “பரிணாமம்” என்றும், தனது குடும்பத்தை வளர்க்க விரும்புவதாகவும்,“ஓய்வு என்ற வார்த்தை எனக்குப் பிடித்ததில்லை.இது … Read more

23 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான செரீனா வில்லியம்ஸ் தனது ஓய்வு குறித்து கூறுகையில், “ஆணாக இருந்தால் ஓய்வு பெற மாட்டேன்”

ஆணாக இருந்தால் ஓய்வு பெறமாட்டேன் என செரீனா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார் 23 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான செரீனா வில்லியம்ஸ் தனது ஓய்வு குறித்து வோக் இதழின் அட்டைப்படத்தில் தெரிவித்துள்ளார். விளையாட்டு வீராங்கனைகளில் ஒருவரான செரீனா வில்லியம்ஸ், தயக்கத்துடன் தனது தொழில்முறை டென்னிஸில் இருந்து ஓய்வு பெறத் திட்டமிட்டுள்ளார். டென்னிஸுக்குப் பிறகு, செரீனா வில்லியம்ஸ் தனது குழந்தை மற்றும் தனது  மூலதன நிறுவனத்தில் கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளார். செரீனா வில்லியம்ஸ் கூறுகையில், “”நான் ஒரு பையனாக இருந்திருந்தால், நான் … Read more

#Breaking:அமெரிக்க ஓபன் டென்னிஸ் – செரீனா வில்லிம்ஸ் விலகல்…!

காயம் காரணமாக அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியிலிருந்து விலகுவதாக செரீனா வில்லிம்ஸ் அறிவித்துள்ளார். நடப்பு ஆண்டின் இறுதி கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டி அடுத்த வாரம் நடைபெறவுள்ளது.இந்நிலையில்,தனது தொடையில் ஏற்பட்ட காயம் முழுமையாக குணமடையவில்லை என்று கூறி அடுத்த வாரம் நடைபெறவுள்ள யுஎஸ் ஓபனில் இருந்து விலகுவதாக உலகின் முன்னணி டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் அறிவித்துள்ளார். முன்னதாக,விம்பிள்டனில் நடைபெற்ற முதல் சுற்று போட்டியின் போது தொடையில் ஏற்பட்ட காயம் காரணமாக அப்போட்டியை விட்டு கண்ணீருடன் வெளியேறினார்.இந்த நிலையில்,அமெரிக்க … Read more

வீடியோ: விம்பிள்டன் போட்டியில் காயம் ஏற்பட்டதால் முதல் சுற்றிலேயே கண்ணீருடன் வெளியேறிய செரீனா!

விம்பிள்டன் டென்னிஸ் முதல் சுற்று போட்டியிலேயே வீராங்கனை செரீனா வில்லியம்ஸுக்கு காலில் காயம் ஏற்பட்டதால் போட்டியிலிருந்து அழுகையுடன் அவர் வெளியேறிய வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. ஆண்டுதோறும் 4 வகையான அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு டென்னிஸ் போட்டிகள் ரத்து செய்யப்பட்ட நிலையில் இந்த ஆண்டு நடைபெறக்கூடிய டென்னிஸ் போட்டிகளுக்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகி இருந்தது. இந்நிலையில், இந்த ஆண்டின் மூன்றாவது மிகப்பெரிய விம்பிள்டன் … Read more

ஒலிம்பிக் போட்டியில் விளையாட மாட்டேன்- செரீனா அறிவிப்பு..!

ஒலிம்பிக் போட்டியில் விளையாட மாட்டேன் என செரீனா வில்லியம்ஸ் அறிவித்துள்ளார். டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் விளையாட மாட்டேன் என அமெரிக்க டென்னிஸ் வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ் அறிவித்துள்ளார். செரீனா வில்லியம்ஸ் அறிவிப்பால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 39 வயதான செரீனா வில்லியம்ஸ் 2012 லண்டன் ஒலிம்பிக்கில் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில் இரண்டிலும் தங்கம் வென்றார். செரீனா நான்கு ஒலிம்பிக் போட்டிகளில் தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார். 2000 ஆம் ஆண்டில் சிட்னியில் இரட்டையர் மற்றும் 2008 … Read more

அரையிறுதியில் செரீனா வில்லியம்ஸ் தோல்வி..!

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்பர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. இதில், மகளிர் ஒற்றையர் பிரிவின் அரையிறுதியில் செரீனா வில்லியம்ஸ் ஜப்பானின் நவோமி ஒசாகா ஆகியோர் மோதினர். ஜப்பான் வீராங்கனை நவோமி ஓசாக்காவிடம் 6-3, 6-4 என்ற நேர் செட்களில் செரீனா வில்லியம்ஸ் தோல்வி அடைந்தார். இதனால், எளிதாக இறுதி ஆட்டத்துக்குள் நுழைந்தார் நவோமி ஒசாகா.  

#BREAKING: செரீனா வில்லியம்ஸ் விலகல்..!

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் இருந்து காயம் காரணமாக செரீனா வில்லியம்ஸ் விலகினார். “கிராண்ட்ஸ்லாம்” என்ற உயரிய அந்தஸ்து பெற்ற பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸில் நடைபெற்று வருகிறது. கடந்த திங்கள்கிழமை பெண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டத்தில், முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் 7-6 (7-2), 6-0 என்ற நேர்செட்டில் சக நாட்டு வீராங்கனை கிறிஸ்டியை தோற்கடித்தார். இந்நிலையில், இன்று செரீனா வில்லியம்ஸ் இரண்டாவது சுற்றில் ஸ்வெட்டானா பிரான்கோவாவை எதிர்கொள்ளவிருந்ததற்கு … Read more

மூன்று வருடம் கழித்து பட்டம் வென்ற செரீனா..! வென்ற பணத்தை காட்டுத்தீ பாதிப்புக்கு அளித்து அசத்தல்.!

செரீனா வில்லியம்  கடந்த 2017-ம் ஆண்டுக்கு பிறகு வெல்லும் முதல் பட்டம் இதுவாகும். பட்டம் வென்று கிடைத்த பரிசுத் தொகையை காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணமாக கொடுத்த செரீனா. ஆஸ்திரேலிய ஓபன் போட்டிக்கு தயாராகும் வகையில் தற்போது ஆக்லாந்து மகளிர் கிளாஸிக் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகின்றது.நேற்று நடைபெற்றஇறுதி போட்டியில் சக வீராங்கனை ஜெஸிக்கா பெகுலாவை ,செரீனா வில்லியம்ஸ் எதிர் கொண்டார்.இப்போட்டியில் செரீனா வில்லியம்ஸ் 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் சக வீராங்கனை ஜெஸிக்கா பெகுலாவை வீழ்த்தினார். … Read more

வைரல் வீடியோ.! மைக் டைசனிடம் தீவிரமாக குத்துச்சண்டை பயிற்சி பெரும் செரினா வில்லியம்ஸ்.!

குத்துச்சண்டை ஜாம்பவான் மைக் டைசனிடம் , செரினா வில்லியம்ஸ் குத்து பயிற்சி பெற்று வருகிறார். குத்துச் சண்டையில் உள்ள நுணுக்கங்களை செரினாவிற்கு சொல்லி கொடுத்து வீடியோவை மைக் டைசன் பகிந்து உள்ளார். அமெரிக்கா வீராங்கனை செரினா வில்லியம்ஸ் டென்னிஸ் போட்டி துறையில் பிரபல வீராங்கனையாக வலம் வருகிறார். செரினா வில்லியம்ஸ் இதுவரை 23 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று உள்ளார். தற்போது செரினா வில்லியம்ஸ் அடுத்த வருடம் நடைபெற உள்ள ஆஸ்திரேலிய கிராண்ட்ஸ்லாம் போட்டிக்கு தயாராகி வருகிறார். … Read more

செரீனா வில்லியம்ஸ் மைதானத்தை சேதப்படுத்தியதால் 13,500 டாலர் அபராதம் !

விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில் அரையிறுதிக்கு அமெரிக்க வீரர் செரீனா தகுதி பெற்று உள்ளார்.கால் இறுதி போட்டியில் சக வீராங்கனையான அலிசான் ரிஸ்கி உடன் நேற்று மோதினர். முதல் செட்டில் செரீனா 6-4 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றினர்.இரண்டாவது செட்டில் ரிஸ்கி 6-4 என்ற கணக்கில் அடித்ததால் இரண்டாவது செட் சமநிலை ஆனது. மூன்றாவது செட்டில் செரீனா ரிஸ்கியின் சர்வீஸ்களை முறியடித்து 6-4, 4-6, 6-3 என்ற செட் கணக்கில் … Read more