இந்தியாவில் கடந்த செப்டம்பர் மாதத்தில் சுமார் 22 லட்சம் வாட்ஸ்அப் பயனாளர்களின் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மக்கள் அதிகம் பயன்படுத்தும் சாட்டிங் தளமான வாட்ஸ்அப்,இந்தியாவில் 2.2 மில்லியனுக்கும்(22 லட்சத்துக்கும்) அதிகமான வாட்ஸ்அப் கணக்குகளை முடக்கியுள்ளதாக அறிவித்துள்ளது.அதே சமயம் 560 புகார் அறிக்கைகள் பெறப்பட்டதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது. திங்களன்று வெளியிடப்பட்ட அதன் சமீபத்திய அறிக்கையில், வாட்ஸ்அப் தளத்தில் 2,209,000 இந்திய கணக்குகள் செப்டம்பர் மாதத்தில் தடை செய்யப்பட்டுள்ளன.இந்த இந்திய வாட்ஸ்அப் கணக்குகள் ‘+91’ ஃபோன் எண் மூலம் […]
கூகுள் நிறுவனம் சில ஆண்ட்ராய்டு போன்களில் யூடியூப், ஜிமெயில், கூகுள் மேப்ஸ் போன்றவற்றை செப்டம்பர் 27 இல் இருந்து தடுக்க உள்ளது. பெரும்பாலான ஆண்ட்ராய்டு போன் பயனர்கள் மூன்று அல்லது நான்கு வருட பயன்பாட்டிற்குப் பிறகு புதிய போன்களுக்கு மாறுகின்றனர். சிலர் பயன்படுத்தும் போன் வீணாகும் வரை பயன்படுத்த விரும்புகிறார்கள். நீங்கள் பழைய ஆண்ட்ராய்டு போன் வைத்திருப்பவர்களில் ஒருவராக இருந்தால் இது உங்களுக்கு முக்கியமான பதிவாக இருக்கும். ஆண்ட்ராய்டின் பழைய பதிப்பில் ஜிமெயில், யூடியூப், கூகுள் மேப்ஸ் […]
வருகின்ற செப்டம்பர் 6 ஆம் தேதி வரை உத்தர பிரதேச மாநிலத்தில் பள்ளிகளை திறப்பதற்கு தடை விதித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று தற்பொழுது குறைந்துள்ளது. எனவே, பல்வேறு மாநிலங்களிலும் பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், உத்திரபிரதேச மாநிலத்தில் கடந்த ஆகஸ்ட் 16 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த சில தினங்களாக […]
செப்டம்பர் மாதம் முதல் ஊழியர்கள் மீண்டும் அலுவலகத்திற்கு வர, அனுமதிக்க வாய்ப்புள்ளது என்று விப்ரோவின் தலைமை ஹெச்.ஆர் சவுரப் கோவில் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் பரவிய கொரோனா பரவல் காரணமாக,ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.இதனால்,தனியார் நிறுவன ஊழியர்கள் தங்களது வீட்டிலிருந்தே பணி புரிந்து வருகின்றனர். எனினும்,தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால்,குறைந்த பட்ச ஊழியர்களுடன் நிறுவனங்கள் செயல்பட தொடங்கியுள்ளன. இந்நிலையில்,செப்டம்பர் முதல் ஊழியர்களை படிப்படியாக மீண்டும் அலுவலகத்திற்கு வந்து பணிபுரிய அனுமதிக்க வாய்ப்புள்ளது என்று விப்ரோவின் தலைமை மனிதவள அலுவலர் […]
கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்த செப்டம்பர் மாதத்திற்குள் அனைத்து நாடுகளிலும் 10% மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்திய சர்வதேச கூட்டமைப்பின் நிகழ்ச்சியில் காணொலி மூலம் உரையாற்றிய உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம், உலக அளவில் தடுப்பூசி கிடைப்பதில் பல ஏற்றத்தாழ்வு இருப்பதாக தெரிவித்தார். வளர்ந்த நாடுகளில் அதிகமான மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது எனவும், ஏழை நாடுகளில் தடுப்பூசி முன்களப்பணியாளர்களுக்கு கூட இன்னும் கிடைக்கவில்லை எனவும் கவலை […]