இந்திய பங்கு சந்தைகள் இன்று சரிவுடன் வர்த்தகமாகியுள்ளது. இன்றைய பங்கு சந்தைகள் தொடங்கியது முதல் சரிவுடன் வர்த்தகமாகியுள்ளது. மும்பை பங்கு சந்தை 532.05 புள்ளிகள் குறைந்துள்ளது.தற்போது 36,591.26 புள்ளிகளாக வர்த்தகமாகிறது.அதேபோல் தேசிய பங்கு சந்தை 146.65 புள்ளிகள் சரிந்து 10,856.85 புள்ளிகளாக வர்த்தகமாகிறது.சவுதியில் உள்ள எண்ணெய் கிடங்கில் ஏற்பட்டுள்ள தீ விபத்து காரணமாக இந்திய பங்கு சந்தைகள் சரிவை சந்தித்துள்ளதாக வல்லுநர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.