ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை செப்டம்பர் 19 வரை நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்க டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் அமலாக்கத்துறை கைது செய்யாமலிருக்க தடைகோரி முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.இதனுடன் சேர்த்து சிபிஐ கைது செய்யாமல் இருக்க தடைகோரியும் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு இடையில் கடந்த ஆகஸ்ட் 21 ஆம் தேதி சிதம்பரத்தை சிபிஐ கைது செய்தது.பின் சிறப்பு நீதிமன்றத்தில் […]