செங்கோட்டை பெண் நகர்மன்ற தலைவருக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்ததாக அந்நகராட்சி ஆணையர் சுகந்தி அறிவித்துள்ளார். தென்காசி மாவட்டத்தில் உள்ள செங்கோட்டை நகராட்சி 24 வார்டுகளை உள்ளடக்கியது. இங்கு, நகர்மன்ற தலைவராக திமுகவை சேர்ந்த ராமலட்சுமி உள்ளார். இந்த சூழலில், கடந்த டிசம்பர் மாதம் திமுக நகர்மன்ற தலைவர் ராமலட்சுமிக்கு எதிராக திமுக, அதிமுக, பாஜக என 19 பேர் கையெழுத்திட்டு, நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இதுதொடர்பான மனு செங்கோட்டை நகராட்சி ஆணையரிடமும் வழங்கப்பட்டது. […]
செங்கோட்டையில் விநாயர் சதுர்த்தி ஊர்வலத்தில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலையடுத்து பிறப்பிக்கப்பட்ட 144 தடை உத்தரவு வருகிற 30-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் கடந்த 13-ந் தேதி இரவு விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் இருதரப்பிரனிடையே மோதல் ஏற்பட்டது. இது கலவரமாக மாறியது. இதையடுத்து செங்கோட்டையில் ஒருநாள் 144 தடை உத்தரவு போடப்பட்டு விநாயகர் சிலைகள் விஜர்சனம் செய்வதற்காக ஊர்வலமாக எடுத்துவரபட்டது. அப்போது மீண்டும் மோதல் ஏற்பட்டதால் போலீசார் தடியடி நடத்தி கும்பலை விரட்டியடித்தையடுத்து ஊர்வலம் […]
செங்கோட்டை, தென்காசி தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளில் வரும் 22ம் தேதி வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என்று நெல்லை எஸ்.பி அருண் சக்திகுமார் தெரிவித்துள்ளார்.வெளியூர் நபர்கள் கலவரம் ஏற்படுத்தும் நோக்கத்துடன் வந்துள்ளனரா என தீவிரமாக விசாரணை செய்து வருகிறோம் என்று நெல்லை எஸ்.பி.தெரிவித்தார்.தொடர்ந்து 5 நாட்கள் 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என்று தெரியவருகிறது. விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகர் சிலை ஊர்வலத்தில் கலவரம் ஏற்பட்டு 144 தடை உத்தரவு அங்கு பிறப்பிக்கப்பட்டது […]
கடந்த 2000 ஆம் ஆண்டு டெல்லி செங்கோட்டை மீது நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் ராணுவ வீரர்கள் உள்பட 3 பேர் கொல்லப்பட்டனர். இந்நிலையில் தாக்குதல் தொடர்பாக பிலால் அகமது காவா என்ற தீவிரவாதி தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டிருந்தான். இவன் லஷ்கர் இ தய்பா இயக்கத்தை சேர்ந்தவன் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. 17 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த பிலால் அகமது காவா-வை டெல்லி விமான நிலையத்தில், டெல்லி சிறப்பு காவல்படை மற்றும் குஜராத் தீவிரவாத தடுப்பு படையினர் நேற்று கைது […]