தமிழகத்தில் 3 கட்டமாக நடைபெற்ற பொறியியல் கலந்தாய்வு நிறைவடைந்து விட்டதாக தமிழக தொழில்நுட்ப இயக்குனரகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து பொறியியல் கல்லூரிகளிலும் அரசு ஒதுக்கீட்டு காலி இடங்கள் அனைத்தும் கடந்த சில நாட்களாக நிரப்பப்பட்டு வருகிறது. அதன்படி தமிழகம் முழுவதிலும் 461 பொறியியல் கல்லூரிகளில் ஒரு லட்சத்து 63 ஆயிரத்து 154 மாணவர் சேர்க்கைக்கான காலியிடங்கள் இருந்ததால் அதற்கான கலந்தாய்வு நடைபெற்றது. இந்நிலையில் இந்த கலந்தாய்வு மூன்று கட்டமாக நடைபெற்றது. இந்த ஆண்டு 90 […]
இன்று காலை 11 மணிக்கு பிரதமர் மோடி உரையாற்றுகிறார். இந்திய தொழில் கூட்டமைப்பின் கருத்தரங்கு கூட்டத்தில் வளர்ச்சியை மீண்டும் பெறுதல் என்ற தலைப்பில் இன்று காலை 11 மணிக்கு பிரதமர் மோடி உரையாற்றுகிறார். இதனிடையே நேற்று கர்நாடகாவில் ரஜீவகாந்தி பல்கலைக்கழக வெள்ளி விழாவை காணொலி மூலம் தொடங்கி வைத்த பின்னர் பேசிய பிரதமர் மோடி, வீரர்களுக்கான உடையை அணியாத போர் வீரர்களாக நமது மருத்துவர்கள் உள்ளனர் தெரிவித்திருந்தார். கொரோனா வைரசுக்கு எதிரான போரில் நமது நாட்டு மருத்துவ […]
சென்னை கிண்டியிலுள்ள டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தில் உலகளவில் கொரோனா வைரஸ் பரவல் தெடர்பாக கருத்தரங்கம் நடைபெற்றது. அப்போது பேசிய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், உலக முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எத்தகைய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றும் அவர்கள் கையாளும் முறை என்ன என்பதை குறித்து சர்வதேச மருத்துவர்களுடன் கேட்டு தெரிந்துகொண்டதாக அமைச்சர் தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் உள்ள மருத்துவமனைகளில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்தவும், பள்ளி, கல்லூரிகளில் தேர்வெழுதவுள்ள மாணவர்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் […]
சென்னையில் டைம்ஸ் ஆஃப் இந்தியா சார்பில் இன்று கருத்தரங்கம் நடைபெற்றது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பதற்கு திரைப்படங்களில் பெண்கள் இடம்பெறும் காட்சிகளும் காரணமாக அமைகிறது என கனிமொழி கூறினார். சென்னையில் டைம்ஸ் ஆஃப் இந்தியா சார்பில் இன்று கருத்தரங்கம் நடைபெற்றது. அதில் பங்கேற்று பேசிய கனிமொழி மரணதண்டனை மட்டுமே எல்லாம் குற்றங்களுக்கும் தீர்வாகாது பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோரை தண்டிக்க கடுமையான சட்டங்கள் இயற்றப்பட வேண்டும். பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதில் சமூகத்திற்கும் பொறுப்புள்ளது எனவும், பெண்களுக்கு […]