பொறியியல் மாணவர்களுக்கான ஆன்லைன் செமஸ்டர் தேர்வுக்கு இணையத்தளத்தில் பதிவு செய்யலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு. தமிழகத்தில் கொரோனா பாதுகாப்பு மையங்களாக செயல்படும் கல்லூரிகள் தவிர்த்து, மற்ற அனைத்து அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள் / கல்லூரிகள் / தொழிற்பயிற்சி மற்றும் பயிற்சி நிலையங்கள் நிலையான கொரோனா வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் செயல்பட அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டியிருந்தது. இதன்பின், கல்லூரிகள் பிப்ரவரி 1-ல் திறந்தாலும், ஏற்கனவே அறிவித்தபடி செமஸ்டர் […]
அனைத்து பல்கலைகளிலும் நடப்பு செமஸ்டர் தேர்வுகள் அனைத்தும் ஆன்லைனிலேயே நடைபெறும் என உயர்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளன. தமிழகத்தில் இறுதியாண்டு மாணவர்களுக்கு இன்று முதல் கல்லூரிகள் திறக்கப்பட்டது. அதுவும் விருப்பமுள்ளவர்கள் மட்டும் கல்லூரிக்கு வரலாம் என்றும் மற்றவர்கள் ஆன்லைனில் வகுப்புகளில் பங்கேற்கலா என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதே நேரத்தில், கொரோனா நெறிமுறைகளுடன் வாரத்தில் 6 நாட்கள் கல்லூரிகள் செயல்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, முகக்கவசம் அணிந்தபடியே 50% மாணவர்களை மட்டும் அனுமதிக்க வேண்டும். […]
இறுதி செமஸ்டர் தேர்வு எழுதாத மாணவர்களுக்கான மறுதேர்வு நவம்பர் 17-ஆம் தேதி முதல் 21-ஆம் தேதி வரை நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. கொரோனா பரவல் அச்சம் காரணமாக இறுதியாண்டு பயிலும் மாணவர்களை தவிர மற்ற ஆண்டு பயிலும் மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து இறுதியாண்டு பயிலும் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டது . அந்த தேர்வை பல மாணவர்களால் தொழில்நுட்ப கோளாறு காரணமாக எழுத இயலாமல் […]
கல்லூரிகளில் இறுதி பருவத்தேர்வுகளை நடத்துவது கட்டாயம் என்று பல்கலைக்கழக மானிய குழு (University Grants Commission ) தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸின் பாதிப்பு காரணமாக கல்லூரி மாணவர்களின் இறுதி ஆண்டு தேர்வை தவிர மற்ற அனைத்து பருவ தேர்வுகளுக்கும் தடை விதித்து அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்தது தமிழக அரசு.மேலும் அரியர்ஸ் எழுதுவதற்கு விண்ணப்பித்த அனைத்து மாணவர்களும் ஆல் பாஸ் என்றும் அறிவிக்கப்பட்டது. இதனிடையே தமிழக அரசின் அறிவிப்பை ரத்து செய்யக்கோரி அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் […]
இறுதி ஆண்டு தேர்வுகள் ஆன்லைன் மற்றும் ஆப்லைன் என்று இரண்டு முறையில் நடத்தப்படும் என்று அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கல்லூரி இறுதி பருவத் தேர்வுகளை தவிர மற்ற அனைத்து பருவப்பாடங்களுக்கான தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார்.ஆனால் இறுதி ஆண்டு தேர்வுகளை கட்டாயம் நடத்த வேண்டும் என்று யுஜிசி தெரிவித்தது . மேலும் அனைத்து தேர்வுகளும் செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் நடத்த வேண்டும் என்று தெரிவித்தது. இதனிடையே உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறுகையில்,இறுதி ஆண்டு […]
செமஸ்டர் கட்டணத்தை செலுத்துவதற்க்கான அவகாசத்தை வரும் 19-ஆம் தேதி வரை நீட்டித்தது அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. சமீபத்தில் அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் மாணவர்களுக்கு சுற்றறிக்கை ஒன்று அனுப்பட்டது. அதில், நடப்பு செமஸ்டர் கட்டணத்தை வருகின்ற ஆகஸ்ட் 30-ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டுமென்றும் கட்டணம் செலுத்த தவறிய மாணவர்கள் ரூ.200 முதல் ரூ.500 வரை அபராதம் செலுத்த வேண்டும். செப்டம்பர் 5-ஆம் தேதிக்குள் கட்டணம் செலுத்த தவறினால் அந்த மாணவர்கள் தங்களுடைய படிப்பை தொடர விரும்பவில்லை என்று கருதப்பட்டு […]
கல்லூரி மாணவர்களுக்கான இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வு செப்டம்பர் 15-ஆம் தேதிக்கு பின்னர் நடைபெறும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார். கொரோனா ஊரடங்கு காரணமாக கல்லூரிகள் திறக்கப்படாத நிலையில் அவர்களது செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களின் செமஸ்டர் தேர்வை தவிர மற்ற அனைத்து பருவ தேர்வுகளுக்கும் தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் தற்போது இறுதி ஆண்டு பயிலும் அனைத்து கல்லூரி மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகளையும் செப்டம்பர் 15-ஆம் […]
இறுதி செமஸ்டர் தேர்வுகள் கட்டாயம் , விரைவில் தேர்வு அட்டவணை என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கல்லூரி இறுதி பருவத் தேர்வுகளை தவிர மற்ற அனைத்து பருவப்பாடங்களுக்கான தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார்.இதனிடையே கல்லூரி இறுதியாண்டு செமஸ்டர் தேர்வை ரத்து செய்ய உத்தரவிட முடியாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.மேலும் பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) அறிவிக்கைகக்கு எதிராக கல்லுரி மாணவர்கள் தொடர்ந்த மனு தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம் இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு […]
கல்லூரி இறுதி ஆண்டு தேர்வுகளை செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்ற யுஜிசி அறிவித்தது. இந்த அறிவிப்பை எதிர்த்து தொடரப்பட்ட நாடு முழுவதும் 31 மாணவர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு மீதான விசாரணை இன்று வந்தது. அப்போது, கல்லூரி இறுதியாண்டு தேர்வுகள் தொடர்பாக மாநில அரசுகள் முடிவு எடுக்க முடியாது என உச்சநீதிமன்றத்தில் பல்கலைக்கழக மானிய குழு வாதிட்டது. மாநில அரசுகளின் விருப்பத்திற்கு ஏற்ப மாற்றியமைக்க முடியாது எனவும், இறுதித்தேர்வு கட்டாயம் நடத்தப்பட […]
இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக தற்போது ஊரடங்கு தளர்வுடன் அமலில் உள்ளது. இந்நிலையில், கொரோனா வைரஸ் காரணமாக கல்வி நிலையங்கள் மற்றும் பல்கலைக்கழகங்கள் அனைத்தும் மூடப்பட்டன. இதனால், பள்ளித்தேர்வுகள் மற்றும் கல்லூரி தேர்வுகள் ஒத்திவைக்கப்படும், ரத்து செய்தும் அரசுகள் உத்தரவு பிறப்பித்து வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்கள் இறுதி தேர்வுகளை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. யுஜிசி வழிகாட்டுதலின்படி இறுதி ஆண்டு தேர்வுகளை கட்டாயம் நடத்த வேண்டும் என உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. […]