மிக்ஜாம் புயல் காரணமாக கனமழை நீடிக்கும் நிலையில், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் நாளை (டிசம்பர் 5) பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 4 மாவட்டங்களில் நாளை கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், வங்கிகள் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், தனியார் நிறுவனங்களும் நாளை விடுமுறை அறிவிக்க வேண்டும், என்றும் ஊழியர்களை வீட்டில் இருந்தபடியே வேலை செய்ய அனுமதிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாளை முதல் டிச.9 வரை… அனைத்து தேர்வுகளும் ஒத்திவைப்பு.. அண்ணா […]
தொலைதூரக் கல்வியில் இளங்கலை, முதுகலை பயிலும் மாணவர்கள் அனைவருக்கும் வரும் மே மாதத்துக்கான செமஸ்டர் தேர்வு ஜூன் 1 முதல் 14 வரை திட்டமிட்டு உள்ளதாகவும், இந்த தேர்வுகள் நேரடி எழுத்துத்தேர்வாக நடைபெறும் என்றும் அண்ணாமலை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இதனிடையே, தொலைதூர கல்வி படித்தவர்கள் ஸ்லெட், நெட் தேர்வு எழுதி வெற்றி பெற்றிருந்தாலும் கல்லூரி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கக்கூடாது என்று ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவுக்கு அரசு தடை பெற வேண்டும் என்றும் தமிழக சட்டப்பேரவையில், […]
பொறியியல் செமஸ்டர் தேர்வு எழுதும் மாணவர்கள், புத்தகத்தை பார்த்தும் எழுதலாம், இணையத்தையும் பயன்படுத்தலாம் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிற நிலையில், உயர்கல்வி நிறுவனங்களில், கல்லூரி மாணவர்களுக்கான தேர்வு முறைகளில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. தேர்வுகளை பொறுத்தவரையில் பெரும்பாலும், ஆன்லைன் முறையில் தான் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், அண்ணா பல்கலைகழகத்தை பொறுத்தவரையில், மாணவர்களுக்கு கடந்த முறை, ஆன்லைன் மூலம் தேர்வு நடைபெற்றது. அப்போது மாணவர்கள் பல சிக்கல்களை எதிர்கொண்டனர். இதனையடுத்து, வரக்கூடிய […]
ஆன்லைன் மூலம் நடப்பு செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பால், பல இடங்களில் பொதுமுடக்கம் அமலில் உள்ள நிலையில், கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில், பள்ளி, கல்லூரிகள் திறப்பு எப்போது என்ற கேள்வி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதனையடுத்து, கல்லூரி மாணவர்களுக்கான செமஸ்டர் […]
வீட்டிலிருந்தபடியே மாணவர்கள்ஏ4 தாளில் வீட்டில் இருந்து தேர்வு எழுதி அனுப்பி வைக்கலாம் என்று சென்னை பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக கல்லூரிகள் திறக்கப்படாத நிலையில் அவர்களது செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) அறிவிக்கைகக்கு எதிராக கல்லுரி மாணவர்கள் தொடர்ந்த மனு தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம். அதன்படி, இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களின் செமஸ்டர் தேர்வை தவிர மற்ற அனைத்து பருவ தேர்வுகளுக்கும் தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. அந்த […]
பல்கலைக்கழக இறுதியாண்டு, செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்த மனுக்கள் மீதான தீர்ப்பை உச்சநீதிமன்றம் நாளை வழங்குகிறது. கொரோனா காரணத்தால் யுஜிசி மற்றும் கல்லூரி இறுதித் தேர்வுகளை நடத்துவதற்கு மாணவர்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பான வாதம் கடந்த ஆகஸ்ட் 10-ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் நடந்தபோது, தேர்வு நடத்த வேண்டுமா, வேண்டாமா என்பது குறித்து இறுதி முடிவு எடுக்க வேண்டியது தாங்கள்தான் என்று யுஜிசி வாதம் வைத்து இருந்தது. மேலும், இந்திய சொலிசிடர் […]
கல்லூரி இறுதி பருவத் தேர்வுகளை தவிர மற்ற அனைத்து பருவப்பாடங்களுக்கான தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார். இது தொடர்பாக முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறியாகியில், கொரோனா நோய் தொற்று காரணமாக, உயர்கல்வி பயிலும் மாணவர்களின் நலன் கருதி, தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையிலும், பல்கலைக்கழக மானியக்குழு (UGC) மற்றும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு (AICTE) ஆகியவற்றின் வழிகாட்டுதலின்படி மதிப்பெண்கள் வழங்கி முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு கலை மற்றும் […]
மாணவர்கள் அனைவரும் அடுத்த கல்வியாண்டிற்கு செல்ல அனுமதி. தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், கடந்த சில மாதங்களாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்ட நிலையில், பள்ளி தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து, தமிழ்நாட்டில் உள்ள கலை மற்றும் அறிவியல் பட்டப்படிப்பு பயிலும் மாணாக்கர்கள், பொறியியல் பட்டப்படிப்பு மற்றும் பலவகை தொழில்நுட்ப பட்டயப் […]
கல்லூரி தேர்வுகளை ரத்து செய்வது குறித்து முதல்வருடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக நாட்டில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் என அனைத்தும் மூடப்பட்டது.ஆனால் இதற்கு இடையில் நடைபெற இருந்த தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டது.எனவே நாளாக நாளாக மாணவர்களிடையே தேர்வு பயம் அதிகரித்து வந்தது.இதனால் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டது.இதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் 10-ஆம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் […]
கொரோனவை முழுமையாக கட்டுப்படுத்திய பின் கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என அமைச்சர் அன்பழகன் தெரிவித்தார். நாடுமுழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால், பள்ளி மற்றும் கல்லூரி தேர்வு ஒத்தி வைக்கப்பட்டும், ரத்து செய்தும் அரசு உத்தரவு பிறப்பித்து வருகிறது. இதையடுத்து, தமிழகத்தில் பத்தாம் வகுப்புத் தேர்வை ரத்து செய்ய கோரி எதிர்க்கட்சிகள் மற்றும் பல தரப்பினர் கூறி வந்த நிலையில், இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மற்றும் […]