சென்னை பல்கலைக்கழக உறுப்புகல்லூரிகளில் இன்று தமிழ் பாட தேர்வு வினாத்தாளில் குளறுபடி ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 3-வது செமஸ்டர் தமிழ் வினாத்தாள்களுக்கு பதில் கடந்த ஆண்டு நடந்த 4-வது செமஸ்டர் வினைத்தாள் வினோகம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 2-ஆம் ஆண்டு மாணவர்களுக்கு கடந்த ஆண்டு நடந்த செமஸ்டர் தேர்வு வினாத்தாள் மாற்றி வழங்கியதால் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.மேலும் தமிழ் பட தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் சென்னை பல்கலைகழகம் அறிவித்துள்ளது.
பொறியியல் கல்லூரிகளுக்கு டிச.8 முதல் செமஸ்டர் தொடங்குகிறது என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு. அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளுக்கான செமஸ்டர் தேர்வு அட்டவணை வெளியாகியுள்ளது. அதன்படி, அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளுக்கு டிசம்பர் 8-ஆம் தேதி முதல் செமஸ்டர் தொடங்குகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைனில் நடைபெறும் செமஸ்டர் தேர்வு பிப்ரவரி 1-ஆம் தேதி தொடங்கி மார்ச் முதல் வாரம் நிறைவடைகிறது என அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு. B.E, B.Tech, மற்றும் B.Arch மாணவர்களுக்கான ஆன்லைன் செமஸ்டர் தேர்வு அட்டவணையை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, பிப்ரவரி 1 முதல் மார்ச் முதல் வாரம் வரை காலை, மாலை என இருவேளைகளிலும் தேர்வுகள் நடைபெறும். பிப்ரவரி 1 முதல் தேர்வு அறிவிக்கப்பட்ட நிலையில், பாடவாரியாக அட்டவணையை வெளியிட்டுள்ளது. இறுதியாண்டு மாணவர்கள் தவிர்த்து, மற்ற […]
பொறியியல் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு டிசம்பர் 13-ம் தேதி தொடங்கும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு. பொறியியல் படிப்புகளுக்கான செமஸ்டர் தேர்வுகள் வரும் டிசம்பர் 13-ம் தேதி முதல் தொடங்கும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கு நேரடி முறையில் செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும். தேர்வுக்கான விரிவான அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என்றும் இன்டெர்னல், வைவா, செமஸ்டர் என அனைத்து தேர்வுகளும் நேரடியாகவே நடைபெறும் எனவும் அறிவித்துள்ளது.
கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளதால் தேர்வுகள் நேரடியாக நடத்துவதே உகந்ததாக காணப்படும் என அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். தனியார் பொறியியல் கல்லூரிகள் தேர்வுகளை ஆன்லைனில் நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர். ஆனால் தேர்வுகள் நேரடியாகவே நடத்தப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளயஜி. இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல் ராஜ் கூறுகையில்,கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளதால் தேர்வுகள் நேரடியாக நடத்துவதே உகந்ததாக காணப்படும் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேலும், ஆன்லைனில் தேர்வு நடத்தினால் மாணவர்களின் திறன் கேள்விக்குறியாகும் என்று […]
அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இறுதியாண்டு மாணவர்களுக்கான தேர்வுகள் முடிந்த பிறகே, இதர ஆண்டு மாணவர்களுக்கான தேர்வு தொடங்கும்; இதுகுறித்து விரிவான அட்டவணை விரைவில் இணையதளத்தில் வெளியிடப்படும் என அறிவித்துள்ளது.
கொரோனா பாதிப்பு காரணமாக கல்லூரிகளில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற வேண்டிய இறுதியாண்டு தேர்வுகள் அனைத்து தற்போது ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் மூலமாக மாணவர்கள் அவரவர் விருப்பப்படியே எழுத வாய்ப்புகள் அளிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக மானிய குழுவின் பரிந்துரையின்படி, இறுதியாண்டு தேர்வு எழுதும் மாணவர்கள் தேர்வு அறைகளில் புத்தகம், குறிப்பேடுகள் மற்றும் பிற ஆய்வு பொருட்களை எல்லாம் பார்த்து தேர்வு எழுதவும் அனுமதிக்கப்படுவதாக பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி லாசர் தெரிவித்து உள்ளார். இதன் மூலமாக கேள்விக்கான பதில்களை […]