சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை ஆரம்பித்த விஜய், தொடர்ந்து தமிழகத்தில் ஆளும் திமுகவுக்கு எதிரான தனது விமர்சனங்களையும், பாஜகவுக்கு எதிரான விமர்சனங்களையும் தனது மேடை பேச்சுக்களில் வெளிப்படுத்தி வருகிறார். இப்படியான கருத்தியல் கொண்ட அவரை இந்தியா கூட்டணியில் இணைய சொல்லி காங்கிரஸ் தரப்பில் இருந்து அழைப்பு விடுக்கப்பட்டது, தமிழக அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது. ஏனென்றால், விஜய் எதிர்க்கும் திமுக, இந்தியா கூட்டணியில் முக்கிய அங்கமாக இருக்கிறது. காங்கிரஸ் கட்சியானது தமிழகத்தில் […]
சென்னை: நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது தந்தை பெரியார் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் கருத்துக்களை பதிவிட்டார். அதிலும், தந்தை பெரியார் உடல் இச்சை பற்றி கூறியதாக சீமான் கூறிய கருத்துக்கள் அரசியல் வட்டாரத்தில் கடும் எதிர்வினைகளை உண்டாக்கியுள்ளது. சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பல்வேறு அரசியல் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல்வேறு காவல் நிலையங்களில் அவர் மீது […]
சென்னை: ஸ்டாண்ட் அப் காமெடி என்கிற பெயரில் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு குறித்து அவதூறாக பேசிய பரத் பாலாஜி என்பவரின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது. இதற்கு பலரும் கண்டனங்களை தெரிவித்து, அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்தனர். இதனை தொடர்ந்து, முன்னாள் பிரதமர் நேரு தொடர்பாக அவதூறு பரப்பும் வகையில் காமெடி செய்த பரத் பாலாஜியை கைது செய்ய வேண்டும் என மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைத்து […]
சென்னை: ஸ்டாண்ட் அப் காமெடி (STANDUP COMEDY) என்கிற பெயரில் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு குறித்து அவதூறாக பேசிய பரத் பாலாஜி என்பவரின் வீடியோ இணையத்தில் வெளியாகி வருகிறது. இதற்கு பலரும் கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில், அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை வலுத்து வருகிறது. அந்த வகையில், காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தனது கடும் கண்டனத்தை தெரிவித்திருப்பதோடு, பரத் பாலாஜியை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக காங்கிரஸ் […]
சென்னை : தமிழ்நாடு துணை முதலமைச்சராக, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவிக்கப்படுவார், தமிழக அமைச்சரவையில் முக்கிய மாற்றங்கள் வரும் என்ற பேச்சுக்கள் தற்போது தீவிரமடைந்துள்ளது. அதற்கேற்றாற் போல , நேற்று முன்தினம் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை வழக்கில் இருந்து ஜாமீன் பெற்று விடுதலையாகியுள்ளார். இதனால், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறிய “மாற்றம் இருக்கும் , ஏமாற்றம் இருக்காது” என்பது போல , விரைவில் மேற்கண்ட மாற்றங்கள் இருக்கும் என்கிறது அரசியல் வட்டாரம். இந்த அறிவிப்புகள் இன்னும் […]
சென்னை : தமிழக வெற்றிக் கழக கொடி அறிமுகம் மற்றும் விஜய் அரசியல் வருகை குறித்தும் செல்வப்பெருந்தகை, திருமாவளவன், சீமான் ஆகியோர் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். திரைத்துறையில் உச்ச நட்சத்திரமாக உள்ள விஜய் தற்போது தீவிர கள அரசியலில் ஈடுபட தொடங்கியுள்ளார். தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை ஆரம்பித்து 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி தனது பயணத்தை துவங்கியுள்ளார். இன்று தனது கட்சிக் கொடியை சென்னை, பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் ஏற்றியுள்ளார். மேலும், கட்சி […]
வயநாடு நிலச்சரிவு : கேரளாவில் பெய்த கனமழை காரணமாக வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 150-ஐ கடந்த துயர சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், 1,000க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மத்திய , மாநில மீட்பு படையினர், ராணுவத்தினர் இந்த மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். வயநாடு நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்க, அவர்களுக்கு உதவிகள் புரிய தமிழக அரசு சார்பில், 2 ஐஏஎஸ் அதிகாரிகள் தலைமையில், மீட்பு குழுவினர், […]
சென்னை : மக்களவை தேர்தலில் ஒரு தொகுதியில் பதிவாகும் வாக்குகளில் 6இல் 1 பங்கு வாக்கு பெறவில்லையெனில், வேட்பாளர் டெபாசிட் செய்த வைப்புத் தொகையை இழக்க வேண்டியிருக்கும். அதன்படி, தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் சீமானின் நாம் தமிழர் கட்சி டெபாசிட்டை இழந்துவிட்டது. இருந்தாலும், அரசியல் அங்கீகாரம் பெருமளவிற்கு எட்டு சதவீதம் வாக்குகள் பெற்றிருந்தது. இந்நிலையில், தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது ‘நாம் தமிழர் கட்சி அரசியல் அங்கீகாரம் பெருமளவிற்கு எட்டு சதவீதம் […]
சென்னை: காங்கிரஸ் போராட்டம் நடத்தினால் அவர்களின் ஊழல் வீடியோ வெளியிடுவோம் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை டிவீட் செய்துள்ளார். ஒடிசாவில் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய பிரதமர் மோடி, ஒடிசா ஜெகநாதர் ஆலையத்தின் பொக்கிஷ அறையின் சாவி தமிழ்நாட்டிற்கு சென்றுவிட்டது என கூறினார். இந்த கருத்துக்கு தமிழகத்தில் பல்வேறு அரசியல் தலைவர்கள் கடும் விமர்சனங்களை பதிவு செய்தனர். பிரதமர் மோடி பேசியது குறித்து நேற்று செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, தமிழ்நாடு வந்தால் தமிழ் […]
Election2024: பிரதமர் மோடியின் வெறுப்பு பேச்சுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கடும் கண்டனம். கடந்த 19ம் தேதி தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்களில் மக்களவை தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், வரும் 26ம் தேதி 13 மாநிலங்களில் இரண்டாம் கட்ட தேர்தலின் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த சூழலில் ராஜஸ்தான் மாநிலத்தில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது காங்கிரஸ் மீது பல்வேறு குற்றசாட்டுகளை முன்வைத்தார். பிரதமர் கூறியதாவது, நாட்டில் உள்ள […]
Election2024: இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் கச்சத்தீவு மட்டுமல்ல இந்தியாவே மீட்கப்படும் என்று செல்வப்பெருந்தகை பேட்டியளித்துள்ளார். மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி புதுச்சேரி உள்ளிட்ட 10 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சூழலில், விருதுகரில் செய்தியாளர் சந்திப்பில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பேசியதாவது, மாநிலங்களின் அதிகாரங்களை மத்திய அரசு பறிக்காமல், சுயாட்சி வழங்க வேண்டும். குறிப்பாக நீட் உள்ளிட்ட நுழைவுத்தேர்வுகள் திணிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் தற்கொலைகளில் பாஜக […]
Congress : இன்னும் ஓரிரு நாட்களில் திமுகவுடனான தொகுதிப் பங்கீடு குறித்து இறுதிகட்ட முடிவு எடுக்கப்படும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி கூறியுள்ளது. மக்களவை தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சிகளும் தொகுதி பங்கீட்டு தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் தமிழகத்தில் திமுக கூட்டணியில் இரு கம்யூனிஸ்ட் கட்சிகள், முஸ்லீம் லீக் உள்ளிட்ட 4 கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டில் உடன்பாடு ஏற்பட்டியிருந்தது. இருப்பினும், காங்கிரஸ், மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகளுடன் திமுக தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. […]
Selvaperunthagai – Thirumavalavan: தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக அண்மையில் தேர்வான செல்வபெருந்தகை, விசிக தலைவர் திருமாவளவனை சந்தித்து வாழ்த்துப் பெற்றார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக பொறுப்பேற்ற பின், தோழமை கட்சித் தலைவர்களை அடுத்தடுத்து செல்வப்பெருந்தகை சந்தித்து பேசி வருகிறார். அந்த வகையில் அவரின் திருமாவளவனுடனான சந்திப்பு நடைபெற்றது. விசிக தலைமை அலுவலகமான சென்னை அசோக்நகர் அம்பேத்கர் திடலில் திருமாவளவனும், செல்வப்பெருந்தகையும் சந்தித்தனர். இதன் பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் பேசும் போது, […]
தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்த கே.எஸ்.அழகிரி கடந்த 2019-ஆம் ஆண்டு பதவியேற்று கொண்டார். அவர் தலைமையில் காங்கிரஸ் 2019 நாடாளுமன்ற தேர்தல், 2021 சட்டசபை தேர்தலை சந்தித்துள்ளது. அவர் தொடர்ந்து 5 வருடங்களாக தலைவர் பதவியில் இருந்த நிலையில் தற்போது தமிழக காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக செல்வப்பெருந்தகை நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக கே.செல்வப்பெருந்தகை நியமிக்கப்பட்டத்திற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் “இந்தியா கூட்டணியில் அங்கம் […]
ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக சம்பவ இடத்திலேயே குற்றவாளி கருக்கா வினோத்தை காவல்துறையினர் கைது செய்தனர். அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு தற்போது விசாரணைக்காக நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக ஆளுநர் மாளிகை அதிகாரிகள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். ஆளுநர் மாளிகை தரப்பில், ஆளுநர் மாளிகை நோக்கி பெட்ரோல் குண்டு வீசபட்டுள்ளது. குற்றவாளிகள் […]