பேருந்திலிருந்து என்னை இறக்கி விட்டவர்களை தண்டிக்க வேண்டாம், குழந்தைகள் பாதிக்கப்படுவார்கள் என பாதிக்கப்பட்ட செல்வமேரி அம்மா கூறியுள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குளைச்சலில் மீன் விற்பனை செய்து வரக்கூடிய செல்வம் எனும் மூதாட்டி மீன் விற்று விட்டு வீட்டுக்கு செல்வதற்காக வானியக்குடி செல்லும் அரசு பேருந்தில் ஏறியுள்ளார். அப்பொழுது மூதாட்டியின் உடலில் துர்நாற்றம் வீசுவதாக கூறி பேருந்து நடத்துனர் அவரை கீழே இறங்கி விட்டுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த மூதாட்டி அந்த பேருந்து நிலையத்தில் நின்று அழுது கூச்சலிட்டுள்ளார். […]