இரண்டரை வயது மகனை 40,000 க்கு விற்று போதை மருந்து வாங்கிய தந்தை மற்றும் குழந்தையை பெற்றுகொண்டவர் என இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அசாம் மாநிலத்திலுள்ள குவகாத்தி எனும் பகுதியிலுள்ள லஹரிகாட் எனும் கிராமத்தில் இரண்டு வயது குழந்தை ஒன்று தனது தந்தையால் நாற்பதாயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளது. இது குறித்து போலீசார் தெரிவிக்கையில், சுஜிதா பேகம் என்பவருக்கு அமினுல் இஸ்லாம் எனும் ஒருவர் தனது குழந்தையை போதை மருந்து வாங்குவதற்காக 40,000 ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளதாக கூறியுள்ளனர். […]