தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சுய உதவி குழுக்களுக்கு அரசு சார்பில் பயிற்சி அளிக்கும் பணிகளுக்கு தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இது தற்காலிக பணியாகும். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளவர்கள் விண்ணப்பிக்க எதுவாக பணியின் விவரங்கள் குறித்து தற்போது மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பின்படி, தூத்துக்குடி மாவட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், கூடுகை மற்றும் கூட்டாண்மை பிரிவின் கீழ் வட்டார வள வல்லுநர் (BRP) மூலம் வட்டார அளவிலான கூட்டமைப்புகள் […]
சுய உதவிக்குழுக்களை மேம்படுத்துவதற்காக மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் ரூ.200 கோடி கடன் தொகையை வழங்கியுள்ளார். மத்திய பிரதேசம் போபாலில் சுய உதவிக்குழுக்களை மேம்படுத்தும் மற்றும் கடன் வழங்கல் திட்டத்தில் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கலந்து கொண்டார். அம்மாநிலத்தில் பெண்கள் அதிகாரமளிக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக 1.30 லட்சம் ஏழை குடும்பங்களுக்கு ரூ.200 கோடி கடன் வழங்கப்பட்டது. இதனிடையே, உஜ்ஜைனிலுள்ள இந்தோக் கிராமத்தில் நீர்வழங்கலை மேம்படுத்துவதற்கான ரூ.79.03 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள இந்தோக் […]
12 ஆயிரம் சுய உதவிக்குழுக்கள் மூலம் 3 கோடி முகக்கவசங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி அறிவித்த 20 லட்சம் கோடி ரூபாய்க்கான பொருளாதார மேம்பாட்டுக்கான சிறப்பு திட்ட அறிவிப்புகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். அதில், ரூ.20 லட்சம் கோடி திட்டத்தில் ரூ.3.60 லட்சம் கோடிக்கு திட்டங்களை அறிவித்திருந்தார். இந்நிலையில், தற்போது செய்தியாளர்களை சந்தித்து 2 ஆம் கட்ட அறிவிப்புகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டு வருகிறார். […]