ரூ.300 மதிப்பிலான ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருட்களை ஏற்றிச் சென்ற பாகிஸ்தான் படகு குஜராத் கடற்கரையில் பிடிபட்டது. இந்திய கடலோர காவல்படையினர், ATS குஜராத்வுடன் இணைந்து மேற்கொண்ட இந்த நடவடிக்கையில், குஜராத்தில் இந்திய கடற்பகுதியில் பாகிஸ்தான் மீன்பிடி படகை பறிமுதல் செய்து, 10 பேரை கைது செய்துள்ளனர். இதில், ரூ.300 கோடி மதிப்பிலான ஆயுதங்கள், வெடிமருந்துகள் மற்றும் சுமார் 40 கிலோ போதைப்பொருள் பாகிஸ்தான் படகில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் விசாரணைக்காக பாகிஸ்தான் படகு ஓகாவுக்கு கொண்டு […]
நேற்று ஒன்பது பேருடன் குஜராத் கடற்கரைக்கு வந்த பாகிஸ்தானை சேர்ந்த மீன்பிடி படகு ஒன்று குஜராத் பயங்கரவாத எதிர்ப்புப் படை போலீசார் மற்றும் இந்திய கடலோர காவல் படையினரால் கைது செய்யப்பட்டு உள்ளது. இந்த படகில் இருந்த ஒன்பது பேருடன் படகில் போதை பொருட்கள் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக கூறியுள்ள கடலோர காவல்படையினர், அந்த படகை இந்திய கடல் பகுதிக்குள் நுழையவிடாமல் தடுத்ததாகவும், அதில் பல போதைப்பொருட்கள் இருந்ததாகவும், அவர்கள் அதை கடலில் வீசிவிட்டு […]
புனே விமான நிலையத்தில் வைத்து துபாய் பயணியிடமிருந்து 466 உயிருள்ள பவளப்பாறைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. புனேவில் உள்ள லோஹேகான் சர்வதேச விமான நிலையத்தில் இருந்த துபாய் பயணிகளிடம் இருந்து 466 உயிர் உள்ள பவளப்பாறைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக கஸ்டம் அதிகாரி அவர்கள் ஐஆர்எஸ் தனஞ்சய் விளக்கமளித்துள்ளார். அப்பொழுது பேசிய அவர், பவளப்பாறைகள் சாதாரண நீரில் வாழ முடியாது. அதற்கு உப்பு நீர் தேவைப்படும். துபாயில் இருந்து வந்த பயணிகளிடம் இருந்து 466 உயிர் உள்ள […]
போதைப் பொருட்கள் அனைத்தும் நாடு முழுவதும் தடை செய்யப்பட்டிருந்தாலும், பல பகுதிகளில் போதைப்பொருள் கடத்தல் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. இந்நிலையில் கொல்கத்தாவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலையத்தில் மூன்று வெளிநாட்டு பயணிகளிடம் இருந்து 113 கோடி மதிப்புள்ள ஹெராயின் எனும் போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதிகாரிகளுக்கு ரகசியமாக கிடைத்த தகவலின் அடிப்படையில் டிஆர்ஐ அதிகாரிகள் 2 பேர் கென்யாவில் இருந்து வந்த ஆண், பெண் பயணி மற்றும் ஒரு மல்லாவி […]
குஜராத் மாநிலத்தில் 730 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். குஜராத் மாநிலத்தில் 120 கிலோ எடையுள்ள ஹெராயின் எனும் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக குஜராத் போலீஸ் துணை சூப்பிரண்டு அதிகாரி கே.கே.படேல் கூறுகையில், 120 கிலோ எடையுள்ள ஹெராயின் எனும் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், இதுதொடர்பான வழக்கில் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் இதே போல நேற்று இரண்டு கிலோ எடையுள்ள ஹெராயின் கைப்பற்றப்பட்டது. […]
ஆம்புலன்சில் வைத்து கடத்தப்பட்ட 1 கோடி மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் ஆம்புலன்சில் வைத்து கஞ்சா கடத்தப்பட்டுள்ளது. ஆந்திராவில் இருந்து இலங்கைக்கு கஞ்ச கடத்த முயன்றது விசாரணையில் ’69தெரியவந்துள்ளது. மேலும் அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா ஒரு கோடி மதிப்புள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கஞ்சாவை கடத்தி வந்த நாகையை சேர்ந்த டெரன்ஸ் ராஜா என்பவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
மும்பை துறைமுகத்தில் 125 கோடி மதிப்புள்ள 25 கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த வாரம் மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் கப்பலில் இருந்து போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்நிலையில் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் உள்ளிட்ட சிலரையும் போலீசார் கைது செய்தனர். இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதால், தொடர்ந்து அம்மாநில அதிகாரிகள் போதை பொருள் தடுப்பு நடவடிக்கையில் தீவிரம் […]
மண்டபத்தில் சுமார் 8 கோடி மதிப்புள்ள 2000 கிலோ கடல் அட்டைகள் கடலோர காவல்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மண்டபம் தெற்கு பகுதியில் உள்ள கடற்கரையில் 15 கிலோமீட்டர் தொலைவில் ஆள் இல்லாமல் ஒரு படகு ஒன்று நங்கூரமிடப்பட்ட நிலையில் இருந்துள்ளது. இதனையடுத்து சந்தேகத்திற்கிடமாக இருந்த இந்தப் படகை கடலோர காவல் படையினர் கைப்பற்றி சோதனை செய்துள்ளனர். அப்பொழுது அதில் தடை செய்யப்பட்ட கடல் அட்டை அதாவது கடல் வெள்ளரி 2000 கிலோ அளவுக்கு இருந்துள்ளது. இது சுமார் […]
திருப்பதி அருகே இரு வெவ்வேறு இடங்களில் வெட்டி கடத்த முயன்ற 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள செம்மரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. திருப்பதி அருகே இரு வெவ்வேறு பகுதிகளில் வெட்டி கடத்த முயற்சித்த 20 லட்சம் மதிப்புள்ள செம்மரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் திருப்பதி சித்தூர் மாவட்டம் கொங்கனவாரிபள்ளி அருகே வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்துள்ளனர். அப்பொழுது செம்மரக் கட்டைகளைக் கடத்த முயன்ற கடத்தல்காரர்கள் அப்பகுதியில் இருந்து செம்மர கட்டைகளுடன் தப்பிக்க முயற்சி செய்துள்ளனர். வனத்துறையினரை கண்டதும் […]
மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு உதவி இயக்குனர் கார்த்திகேயன் தலைமையிலான குழுவினர் கப்பலில் சந்தேகப்படும்படியாக 6 கண்டெய்னர் பெட்டிகளை மடக்கிப் பிடித்துள்ளனர். தூத்துக்குடி வ.உ.சி துறைமுகம் வழியாக போதைப்பொருள் கடத்தப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து, தூத்துக்குடிக்கு வரும் கண்டெய்னர்களை தீவிரமாக கண்காணித்து வந்தனர். அப்போது பிரேசில் நாட்டிலிருந்து தூத்துக்குடியை சேர்ந்த ஒரு நிறுவனத்திற்கு மரக்கட்டைகள் இறக்குமதி செய்யப்பட்டது. அந்த மரக்கட்டைகள் கண்டெய்னர்களில் அடைக்கப்பட்டு பனாமா நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. […]
உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்தாரஸ் என்ற கிராமத்தில் 19 வயது இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, மிகவும் பரிதாபமான முறையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இவர் உயிரிழந்துள்ளார். அப்பெண்ணின் உடலை பெற்றோரிடம் ஒப்படைக்காமல் போலீசாரே தகனம் செய்ததால், இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், பிரியங்கா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகிய இருவரும் உயிரிழந்த இளம் பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்க சென்ற போது இவர்கள் சென்ற போது போலீசார் தடுத்து […]
உத்தர பிரதேச மாநிலத்தில் சட்டவிரோதமாக அச்சடிக்கப்பட்டு விற்கப்பட்டு வந்த என்.சி.இ.ஆர்.டி. புத்தகங்கள் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். உத்தர பிரதேச மாநிலம், மீரட் காவல்துறையினருக்கு என்.சி.இ.ஆர்.டி புத்தகங்களை சட்டவிரோதமாக அச்சடிக்கப்பட்டு, விற்பனை செய்து வருவதாக தகவல் கிடைத்தது. இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறை மற்றும் சிறப்பு பணிக்குழு அதிகாரிகள், அங்கு புத்தகங்களை விற்பனை செய்து வந்த 12 பேரை கைது செய்துள்ளனர். அங்கு விற்கப்பட்டு வந்த புத்தகங்கள்களை காவலர்கள் பறிமுதல் செய்தனர். அந்த புத்தகம் அனைத்தும் ரூ.35 […]
ஷார்ஜாவிலிருந்து விமானம் மூலம் கடத்தி வரப்பட்ட ரூ.30.55 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை கண்ணூரில் சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர். 657 கிராம் எடையுள்ள தங்கத்தை விமானத்தில் கடத்தி வந்த பயணியையும் சுங்கத்துறையினர் கைது செய்தனர்.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் புறநகரில் உள்ள சரக்கு வாகனத்தை ஐதராபாத் மண்டல பிரிவு, வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (டி.ஆர்.ஐ) நேற்று தடுத்து நிறுத்தி சோதனைநடத்தினர். அந்த சோதனையில் மொத்தம் ரூ .2.62 கோடி மதிப்புள்ள 1050 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டார். இது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
துபாயில் இருந்து தரையிறங்கிய 2 பயணிகளிடமிருந்து 18 ஆப்பிள் மொபைல் போன்கள், 2000 சிகரெட்டுகளை கோழிக்கோட்டின் விமான புலனாய்வு பிரிவு பறிமுதல் செய்தது. மேலும், துபாயில் இருந்து வந்த மற்றொரு பயணியிடமிருந்து ரூ .10.09 லட்சம் மதிப்புள்ள 201 கிராம் தங்கச் சங்கிலியையும் பறிமுதல் செய்தனர் கொச்சியின் சுங்கதுறை ஆணையம்.
நெதர்லாந்தில் இருந்து பார்சல் மூலம் அனுப்பிவைக்கப்பட்ட 540 போதை மாத்திரைகள் சென்னையில் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட போதை மாத்திரைகளின் மதிப்பு ரூ.16 லட்சம் என கூறப்படுகிறது. இந்த போதை மாத்திரைகளை கடத்தியதாக சென்னையை சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நேற்று கோவை மாவட்டத்தில் உள்ள உக்கடத்தில் கெட்டுப்போன 500 கிலோ மீன்களை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.இந்நிலையில் இன்று உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் சென்னை சிந்தாதிரிபேட்டையில் 500 கிலோ கெட்டுபோன மாட்டிறைச்சி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 01-ம் தேதி முதல்முதலாக மதுரை கரிமேடு மீன் சந்தையில் உள்ள மீன் கடைகளில் மீன்கள் மீது ரசாயனம் கலந்து விற்கப்படுவதாக புகார் எழுந்தது.இதை தொடர்ந்து 20 பேர் கொண்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பரிசோதனை செய்தனர். […]
மஹாராஷ்டிராவில் இருந்த வந்த லாரியில் 21 டன் வெங்காயம், சீர்காழியில் பறக்கும் படையால் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வெங்காயம், வாக்காளர்களுக்கு வழங்க கொண்டுவரப்பட்டதா? என்ற கோணத்தில் காவல் துறையில் விசாரித்து வருகின்றனர். உள்ளாட்சி தேர்தலையொட்டி, நாகை மாவட்டம், சீர்காழி அருகே தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அங்கு ஒரு சரக்கு லாரி வந்தது. அந்த லாரியில் 21 டன் வெங்காயம் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து அவர்கள் விசாரிக்கையில், அந்த வெங்காயங்கள், மகாராஷ்டிரா மாநிலம், […]
சனிக்கிழமையன்று சென்னை உணவு கேண்டீனுக்காக தண்ணீர் கேன்களை வழங்க லாரி சென்னையிலிருந்து மதுரைக்கு வந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளார்கள்.மதுரை ரயில் நிலையத்தில் ரூ .7.62 லட்சம் டாலர் கொண்ட கள்ள நோட்டுகள் கொண்ட லாரியை போலீசார் இன்று காலை கைப்பற்றினர். ஞாயற்றுக்கிழமை பணத்தை கைப்பற்றியதாகவும் சனிக்கிழமையன்று இரவு தனது லாரில் தூங்கிக் கொண்டிருந்ததாகவும் டிரைவர் கூறியுள்ளார்.இதை தொடர்ந்து போலீசார் மேலும் விசாரித்துவருகிறார்கள்
கல்கி ஆசிரமத்திற்கு சொந்தமான ஆந்திரா மாநிலத்தில் உள்ள சித்தூர் மற்றும் நாடு முழுவதும் உள்ள 40 -க்கும் மேற்பட்ட ஆசிரமத்தில் வருமான வரிதுறை இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகிறது. கணக்கில் காட்டாமல் சொத்துக்களை வாங்கியதும் சோதனையில் தெரியவந்தது. நாடு முழுவதும் உள்ள 40 மேற்பட்ட கல்கி ஆசிரமத்தில் 400-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்திலும் , ஆப்பிரிக்க நாடுகளிலும் அதிக அளவில் நிலம் வாங்கியது வருமானவரிதுறை நடத்திய சோதனையில் தெரியவந்தது.சென்னை ஆயிரம் […]