பட்டப் படிப்பு, பட்டய படிப்பு (டிப்ளமா), ஐடிஐ முடித்த தமிழகத்தில் வசிக்கும் பட்டதாரிகளுக்கு தொழில்முனைவோர் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம் (நீட்ஸ்) என்ற சிறப்பு கடனுதவி திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தியுள்ளது. அதன்படி உற்பத்தி மற்றும் சேவை நிறுவனங்கள் குறைந்தபட்சமாக ரூ.10 லட்சமும், அதிகபட்சமாக ரூ.5 கோடியும் கடனுதவி பெறலாம். கடனை பெறும் பட்டதாரிகள் முதல் தலைமுறை தொழில் முனைவோராக இருப்பது அவசியம்.இதற்கான விண்ணப்ப்பத்தை சென்னையை சேர்ந்த பட்டதாரிகள் www.msmeonline.tn.gov.in/needs என்பதன் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என சென்னை […]