எல்லையில் தொந்தரவு செய்பவர்களுக்கு அவர்களுடைய பாணியிலேயே பதிலடி கொடுக்கப்படும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். இந்திய எல்லைகளைப் பாதுகாப்பதில் முக்கிய பங்கினை ஆற்றிவரும் எல்லை பாதுகாப்புப் படையின் 18-வது பதக்கம் வழங்கும் விழா இன்று டெல்லியில் நடைபெற்றது. இவ்விழாவில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்துகொண்டு வீர மரண அடைந்தவர்களுக்கு, துணிச்சலுடன் பணி புரிந்தவர்களுக்கும் விருதுகளை வழங்கி கௌரவித்தார். இதன்பின் இந்த விழாவில் உரையாற்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, உயர்ந்த தியாகம் செய்தவர்களுக்கு நான் வீரவணக்கம் […]
பஞ்சாப் மாநிலத்தில் இந்திய – பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் 2 தீவிரவாதிகள் எல்லைப்பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். பஞ்சாப் மாநிலம் அத்தாரி எல்லை பகுதியில் பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு பதுங்கியிருந்த தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கிசூடு நடத்தியுள்ளனர். இதற்கு தேடுதல் பணியில் ஈடுபட்ட வீரர்கள் தக்க பதிலடி கொடுத்துள்ளனர். இந்த துப்பாக்கிசூடு சம்பவத்தில் ஊடுருவ முயன்ற 2 தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொள்ளப்பட்டது என்று உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஊடுருவ முயன்ற […]