Naxalites: சத்தீஸ்கரில் 7 நக்சலைட்டுகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். சத்தீஸ்கர் மாநிலத்தில் நாராயண்பூர் மற்றும் கான்கேர் மாவட்ட எல்லைப் பகுதியில் உள்ள அபுஜ்மத் என்ற வனப்பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும் நக்சலைட்டுகளுக்கும் இடையே துப்பாக்கி சூடு சம்பவம் நடந்துள்ளது. இதில் 2 பெண்கள் உள்பட 7 நக்சலைட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அதுமட்டுமில்லாமல் சம்பவம் நடந்த இடத்தில் இருந்து ஒரு ஏகே 47 துப்பாக்கி உட்பட ஏராளமான ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டதாகவும், கொல்லப்பட்ட நக்சலைட்டுகளின் அடையாளம் இன்னும் கண்டறியப்படவில்லை என்றும் […]
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் உள்ள முன்ஜ் மார்க் பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே செவ்வாய்க்கிழமை நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். சுட்டுக்கொல்லப்பட்ட மூவரும் “தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான எல்.ஈ.டி.யுடன் தொடர்புடையவர்கள் என்றும் அவர்களை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தானில் நான்கு பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்டதாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது. கடந்த 19-ஆம் தேதி தென்மேற்கு பலூசிஸ்தான் மாகாணத்தில் பாதுகாப்புப் படையினர் நான்கு பயங்கரவாதிகளை கொலை செய்துள்ளதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது. பலூசிஸ்தானின் அவாரன் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் இருப்பதை உறுதி செய்வதற்காக பாதுகாப்புப் படையினர் உளவுத்துறை அடிப்படையிலான நடவடிக்கையை மேற்கொண்டபோது, நான்கு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக ராணுவ அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். ராணுவத்தின் ஊடகப் பிரிவான இன்டர்-சர்வீசஸ் பப்ளிக் ரிலேஷனின் அறிக்கையில், பயங்கரவாதிகளின் மறைவிடமும், ஒரு தளவாட தளமும் […]
மத்திய தொழில் பாதுகாப்பு படையில் காலியாக உள்ள தலைமை காவலர் பணியிடங்களை நிரப்புவதற்காக மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய தொழில் பாதுகாப்பு படையில் காலியான 300 பணியிடங்களை நிரப்படவுள்ளது. இப்பணியிடங்கள் விளையாட்டு வீரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் கீழ்காணும் முறையில் விண்ணப்பிக்கலாம். விளையாட்டுத்துறை : தடகளம், குத்துசண்டை, கூடைப்பந்து, ஜிம்னாஸ்டிக், ஹண்ட் பால், கால்பந்து, ஹாக்கி, கபடி, ஜூடோ, நீச்சல், துப்பாக்கி சுடுதல், வாலிபால், பளுதூக்குதல், மல்யுத்தம், டேக்வாண்டோ ஆகிய 15 பிரிவுகளை சேர்ந்த வீரர்களுக்கு […]
நாடு முழுவதும் இஸ்லாமியர்களின் திருநாளான பக்ரீத் பண்டிகை இன்று வெகு சிறப்பாக கொண்டாப்பட்டு வருகிறது. பக்ரீத் பண்டிகை போது இந்தியா -பாகிஸ்தான் எல்லை பகுதியான அட்டரி வாகா பகுதியில் உள்ள இரு நாட்டின் பாதுகாப்பு படை வீரர்கள் இனிப்பை பரிமாற்றி கொள்வது வழக்கமாக நடப்பது. ஆனால் இன்று இரு நாட்டின் பாதுகாப்பது படை வீரர்கள் இனிப்பை பரிமாற்றி கொள்ள வில்லை.எல்லை பகுதியில் உள்ள இந்திய பாதுகாப்பு படைவீரர்கள் இனிப்பு கொடுக்க தயாராக இருந்தாலும் அதை வாங்க பாகிஸ்தான் […]
காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். புல்வாமா மாவட்டம் ராஜ்போரா பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து பாதுகாப்புப் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பதுங்கியிருந்த தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதால் பாதுகாப்புப் படையினர் பதிலடிக் கொடுத்தனர். இந்த சண்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்ப்டடனர்.இதனிடையே, சம்பா பகுதியில் ராணுவத்தினர் மேற்கொண்ட தேடுதல் வேட்டையில் நிலத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த ஏகே 47 துப்பாக்கிகள், தோட்டாக்கள், […]