சத்தீஸ்கர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட் தீவிரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலில் 9 வீரர்கள் பலியாகினர். பிஜப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் கூட்டு ரோந்து முடிந்து திரும்பும்போது நக்சலைட்டுகள், பாதுகாப்புப் படையினர் சென்ற வாகனத்தை குறிவைத்து ஐஈடி வெடிகுண்டுகளை வீசி வெடிக்கச் செய்துள்ளனர். இதில் வாகனத்தில் சென்ற 9 வீரர்கள் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பலர் இந்த குண்டுவெடிப்பில் காயம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. அண்மையில், சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தர் மாவட்டத்தில், பாதுகாப்புப் படையினருக்கும் நக்சல்களுக்கும் இடையே நடந்த என்கவுன்டரில் 5 […]
நேற்று நாகாலாந்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பொது மக்கள் உயிரிழந்தனர். நாகாலாந்தில் உள்ள மோன் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பொது மக்கள் உயிரிழந்தனர். அசாம் ரைஃபிள்ஸ் பாதுகாப்புப் படையினருக்கு மோன் மாவட்டத்தி தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் நேற்று மாலை பாதுகாப்புப் படையினர் தேடுதல் நடத்தினர். அப்போது அருகில் உள்ள நிலக்கரித் தொழிற்சாலையில் வேலையை முடித்து விட்டு அபோகுதியில் உள்ள கிராம இளைஞர்கள் […]
இன்று ஜம்மு காஷ்மீரில் உள்ள அனந்த்நாக், தியால்காம் ஆகிய பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பதுங்கியிருந்த தப்பியோட முயற்சி செய்தனர்.இதனால் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை ஏற்பட்டது. நீண்ட நேரம் நடந்த இந்த துப்பாக்கிச் சண்டையின் முடிவில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஆயுதங்களும், வெடிமருந்துகளும் மீட்கப்பட்டது.