#Breaking: முதல்வர் மு.க.ஸ்டாலினின் செயலாளர்களாக 4 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்.!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் முதன்மை செயலாளராக உதயசந்திரன் ஐஏஎஸ் என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். திமுக தலைவர் முக ஸ்டாலின் தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்ற உடனே அதிரடியான 5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டு அதற்கான அரசாணையும் வெளியிட்டிருந்தார். இந்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலினின் செயலாளர்களாக உதயச்சந்திரன், உமாநாத், எம்.எஸ் சண்முகம், அனு ஜார்ஜ் ஆகிய 4 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதில், முதல்வர் மு.க.ஸ்டாலினின் முதன்மை செயலாளராக உதயச்சந்திரன் ஐஏஎஸ் என்பவர் செயல்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.