கொரோனா தடுப்பு மருந்தான கோவாக்ஸின் தடுப்பூசிக்கான இரண்டாம் கட்ட பரிசோதனை இன்று முதல் எஸ்ஆர்எம் மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கொரோனா வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்த கோவாக்ஸின் என்ற தடுப்பூசியை ஐதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனம் கண்டுபிடித்து, அதன் பல்வேறு கட்ட சோதனைகளுக்கு பின்னர் முதலில் விலங்குகளுக்கு அளித்து பரிசோதனை செய்யப்பட்டு வெற்றி அடைந்ததால், இதற்கு இந்திய மருந்து கட்டுபாட்டு தலைமையகம் ஒப்புதல் அளித்தது. அதனை தொடர்ந்து ஐசிஎம்ஆர் கோவாக்ஸின் தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதனை செய்ய […]