புதுக்கோட்டை மாவட்டம் மேற்பனைக்காடு பகுதியை சார்ந்த ராஜபிரபு.இவர் கடந்த வாரம் அவருடைய இருசக்கர வாகனத்தில் காரைக்குடி -அறந்தாங்கி சாலையில் சென்று கொண்டு இருந்த போது அங்கு வாகன பரிசோதனையில் ஈடுபட்டு இருந்த காவல்துறை ராஜபிரபுவை வழி மறித்தனர். ராஜபிரபு தலைக்கவசம் அணியாமல் சென்று உள்ளார்.இதனால் காவல்துறை ராஜபிரபுவிற்கு அபராதமாக ரூ.100 வசூலித்து உள்ளனர்.அபராதம் வசூல் செய்த ரசீதையும் காவல்துறை வழங்கி உள்ளனர். இதைத்தொடர்ந்து ரசீது சீட்டை பார்த்து ராஜபிரபு அதிர்ச்சியடைந்தார்.அந்த ரசீது சீட்டில் சீட் பெல்ட் அணியாததால் […]
கர்நாடக அரசின் சார்பில் பெங்களூருவில் நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு, வாகனத்தை பராமரிப்பது குறித்தும், விபத்துகளை தடுப்பது குறித்தும் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. இது குறித்து கர்நாடக அரசு போக்குவரத்து கழகத்தின் நிர்வாக இயக்குநர் உமா சங்கர் கூறியதாவது: தலைநகர் பெங்களூருவில் இருந்து மும்பை, கோவா, திருவனந்தபுரம், ஹைதராபாத் போன்ற தொலைதூர நகரங்களுக்கு செல்லும் கேஎஸ்ஆர்டிசி விரைவு பேருந்துகள் அவ்வப்போது விபத்துகளில் சிக்குகின்றன. குறிப்பாக நெடுஞ்சாலைகளில் திடீரென ஏற்படும் பிரச்சினைகளை சமாளிக்க ஓட்டுநர் திடீரென […]
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் முக்கிய அறிவிப்பு திருமலைக்கு இரு சக்கர வாகனங்களில் வரும் பக்தர்கள் ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வரும் பக்தர்கள் சீட்பெல்ட் உபயோகிக்க வேண்டும் வாகனங்களில் வரும் பக்தர்கள் வாகன உரிமம் கட்டாயப்படுத்தப் பட்டுள்ளது இந்த முறை உடனடியாக அமுலுக்கு வரும்என்று தேவஸ்தானத்தின் செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளது.