நாம் தமிழர் கட்சி நிர்வாகி செல்வன் படுகொலைக்குக் காரணமான கொலையாளிகள் உடனடியாகக் கைது செய்யவில்லையென்றால் மாநில அளவில் போராட்டம் நடத்துவோம் என சீமான் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது, குறித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர், சீமான் தனது டிவிட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளிட்டுள்ளார். அந்த அறிக்கையில், தூத்துக்குடி மாவட்டம், திருவைகுண்டம் தொகுதி, சொக்கன்குடியிருப்பு ஊராட்சியின் நாம் தமிழர் கட்சி செயலாளர் அன்புத்தம்பி செல்வன் படுகொலை செய்யப்பட்ட செய்தியறிந்து பேரதிர்ச்சியடைந்தேன். அச்செய்தி கேள்வியுற்ற நொடி முதல் […]