சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் 1,800 கோடி ரூபாய் முதலீட்டில் செயல்பட்டு வந்த வீடியோகான் நிறுவனத்துக்கு சீல் வைக்கப்பட்டது. கடந்த 2010ம் ஆண்டு தொடங்கப்பட்டு, 500 தொழிலாளர்களுடன் இயங்கி வந்த அந்நிறுவனத்தில் டிவி, பிரிட்ஜ், ஏசி, செல்போன் உதிரிபாகங்கள் அசெம்பளிங் செய்யப்பட்டன. அரசு நிதிகிடைக்காததால் ஆட்குறைப்பில் நிர்வாகம் ஈடுபட்டது. இந்நிலையில் வங்கி அதிகாரிகள் நேற்று கடன் நிலுவைக்காக நிறுவனத்திற்கு சீல் வைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இந்நிலையில் அங்கு பணியாற்றிய தொழிலாளர்கள் தங்களுக்கு 3 மாதமாக சம்பளம் தரவில்லை என்று […]