ஈரோடு சுதா மருத்துவமனைக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற பிறப்பித்த உத்தரவு ரத்து. கருமுட்டை விவகாரத்தில் ஈரோடு சுதா மருத்துவமனைக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தது சென்னை உயர் நீதிமன்றம். கருமுட்டை விவகாரத்தில் இராசு சுதா மருத்துவமனைக்கு வைத்த சீலை அகற்ற தனி நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில், தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்தது சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு. சிறுமி கருமுட்டை விற்பனை விவகாரத்தில் தமிழக அரசு மேல்முறையீட்டு […]
எடப்பாடியில் அறநிலையத்துறை வசம் இருந்த இடத்தில் அமைக்கப்பட்ட உழவர் சந்தைக்கு சீல். சேலம் மாவட்டம் எடப்பாடி பிரசன்ன நஞ்சுண்டேஸ்வரர் கோயிலை சுற்றி அமைக்கப்பட்ட உழவர் சந்தைக்கு சீல் வைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. உழவர் சந்தை அமைப்பதற்கான ரூ.93 லட்சம் வழங்கப்படவில்லை என வழக்கு பதவி செய்யப்பட்ட நிலையில், சந்தைக்கு சீல் வைக்க உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது. ரூ.93 லட்சம் செலுத்தும் வரை உழவர் சந்தைக்கு சீல் வைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தந்தூரி சிக்கன் சாப்பிட்டு மாணவர் உயிரிழந்த விவகாரத்தில் உணவகத்துக்கு சீல் வைக்க நகராட்சி ஆணையருக்கு காவல்துறை பரிந்துரை. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் 12ம் வகுப்பு மாணவர் திருமுருகன் (வயது 17) என்பவர் அசைவ உணவகத்தில் தந்தூரி சிக்கன் சாப்பிட்டதால் உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்தார் என அந்த மாணவனின் தந்தை காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்திருந்தார் என தகவல் கூறப்பட்டியிருந்தது. கடந்த 24-ஆம் தேதி தந்தூரி சிக்கன் சாப்பிட்ட பின் மாணவனுக்கு வயிற்றுப்போக்கு, வாந்தி, மயக்கம் ஏற்பட்ட […]
புதுக்கோட்டையில் உள்ள குழந்தைகள் பாதுகாப்பு இல்லத்திற்கு அரசு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். புதுக்கோட்டை அருகே உள்ள குடுமியான்மலை எனும் பகுதியில் தனியார் குழந்தைகள் பாதுகாப்பு இல்லம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த காப்பகத்தில் குழந்தைகளுக்காக வெளிநாடுகளிலிருந்து பணம் அனுப்பப்படுவதாகவும், ஆனால் இந்த பணத்தை பெற்றுக்கொண்ட காப்பக உரிமையாளர்கள் குழந்தைகளை முறையாக பராமரிக்கவில்லை எனவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இந்த காப்பகத்தை நடத்தி வந்த அரசு பள்ளி ஆசிரியை கலைமகள் மற்றும் அவரது கணவர் ராஜேந்திரன் […]
சுஷில் ஹரி பள்ளியில் 1 மணி நேரம் சோதனை மேற்கொண்ட சிபிசிஐடி போலீசார் சிவசங்கர் பாபாவின் அறைக்கு சீல் வைத்தனர். சுஷில் ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா மீது அப்பள்ளியின் முன்னாள் மாணவிகள் பாலியல் புகார் தெரிவித்ததை தொடர்ந்து, நேற்று முன்தினம் டெல்லியில் வைத்து போலீசார் கைது செய்தனர். நேற்று சிவசங்கர் பாபாவை செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் ஆஜர்படுத்தியுள்ளனர். இதனைத் தொடர்ந்து, சிவசங்கர் பாபாவை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு […]
ஹரியானாவில் உள்ள பிரபல உணவகங்களின் ஊழியர்கள் 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, 4 உணவகங்கள் சீல் வைப்பு. ஹரியானாவில் முர்தால் எனும் சாலையோர உணவகங்களில் பணி செய்யும், ஊழியர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொண்டபோது 60க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு கொரானா வைரஸ் இருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து சுகாதாரத்துறை அமைச்சர் ஹரியானாவில் உள்ள அனைத்து உணவகங்களிலும் உள்ள ஊழியர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு அறிவித்துள்ளார்.இதனடிப்படையில் ஏற்கனவே நான்கு சாலையோர உணவகங்கள் சீல் வைக்கப்பட்டுள்ளது. […]
தூத்துக்குடி சென்னை சில்க்ஸ் நிறுவனம் மூடி சீல் வைப்பு. தூத்துக்குடியில் உள்ள சென்னை சில்க்ஸ் நிறுவனமானது, அங்குள்ள வி.இ சாலையில், 5 மாடி கட்டிடங்களுடன் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனதத்தில் ஜவுளி விற்பனை, நகை விற்பனை மற்றும் சூப்பர் மார்க்கெட் பொருட்கள் போன்ற பிரிவுகள் இயங்கி வருகிறது. இந்நிலையில், இந்த நிறுவனம் சூப்பர் மார்க்கெட் இயங்கும் கட்டடம் அனுமதியை மாநகராட்சியிடம் பெறவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து விளக்கம் கேட்டு நோட்டிஸ் அனுப்பியும் அவர்கள் பதில் அளிக்காத நிலையில், […]
காவல்துறை அதிகாரிக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து, பெங்களூரு காவல் நிலையத்திற்கு சீல் வைப்பு. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், பெங்களூரின் மையப் பகுதியில் உள்ள ப்பன் பார்க் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த, கான்ஸ்டபிள் ஒருவருக்கு கொரோனா பரிசோதனையில், பாசிட்டிவ் என சோதனை முடிவுகள் வெளியானது. இந்நிலையில், இவருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து, காவல்நிலையத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இவரது […]
சென்னையில் 15 மண்டலங்களில் ஊரடங்கு தொடங்கி தற்போது வரை 350 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். சென்னையில் நேரக் கட்டுப்பாட்டை பின்பற்றாமல் இருந்த 350 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். சென்னையில் 15 மண்டலங்களில் ஊரடங்கு தொடங்கி தற்போது வரை 350 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது என்றும் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க நேரக் கட்டுப்பாடுகளை பின்பற்றாமல் இருந்ததால் சீல் வைக்கப்பட்டுள்ளது என்று மாநகராட்சி ஆணையர் […]
தமிழகத்தில் கொரோனா தாக்கம் அதிகரித்து கொண்டு செல்கிறது. அதில் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டமாக சென்னை உள்ளது.இதனால் பொதுமக்கள் சமூக இடைவெளி மற்றும் மாஸ்க் அணிவது போன்றவை கடைபிடிக்க வேண்டும் என அரசு மற்றும் மாநகராட்சி சார்பில் கூறப்பட்டு உள்ளது. ஆனால் அதை பலர் கடைப்பிக்காததால் சென்னை மாநகராட்சி சார்பில் மாஸ்க் அணியாமல் வெளியே நடந்து சென்றால் ரூ.100 அபராதம் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது , […]
சேலத்தில் உள்ள மடிபிளக்ஸ் வளாகத்தில் உள்ள 5 தியேட்டர்களுக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். இந்த தியேட்டர்கள் 30 லட்சம் கேளிக்கை வரி செலுத்த வேண்டி இருந்த நிலையில், வரி செலுத்தாத காரணத்தால், மல்டிபிளக்ஸ் வளாகத்தில் உள்ள ஏ.ஆர்.ஆர்.எஸ் தியேட்டர்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.