அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது!

Cyclone Biparjoy

மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தில் அடுத்து 2 நாட்களுக்கு மழை பெய்யும் என எச்சரித்துள்ளது. இந்நிலையில், கடலோர பகுதி சீற்றத்துடன் காணப்படும் என்றும் அலைகள் பல அடி உயரத்திற்கு எழும்பும் என்பதால், மீனவர்கள் பாதுகாப்பாக கடலுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி புயலாக மாற வாய்ப்பில்லை என கூறப்படுகிறது. மீனவர்களுக்கான எச்சரிக்கை இன்று மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய … Read more

இந்தந்த தேதிகளில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் – வானிலை மையம் எச்சரிக்கை

தமிழ்நாட்டில் நாளை முதல் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு. கடல் கொந்தளிப்பாக காணப்படும் என்பதால் வரும் 8, 9, 10 ஆகிய தேதிகளில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னையில் இருந்து 770 கி.மீ தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலைகொண்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக மாறும். மணிக்கு 15 கி.மீ வேகத்தில் காற்றழுத்த தாழ்வு … Read more

தமிழகத்தின் கடலோர மாவட்டங்களுக்கு இரண்டு நாள் ரெட் அலர்ட் …!

தமிழகத்தின் கடலோர மாவட்டங்களுக்கு இரண்டு நாள் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக தொடர்ச்சியாக கடந்த சில வாரங்களாக பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. கன மழையால் பல மாவட்டங்களில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், குமரி கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இலங்கை கடற்கரை பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் பரவலாக கன மழை … Read more

ஸ்கூபா டைவிங் உடையில் கடலுக்குள் பயணம் செய்து பிளாஸ்டிக்கை நீக்கும் 7 வயது சிறுமி…!

ஸ்கூபா டைவிங் உடையில் கடலுக்குள் பயணம் செய்து பிளாஸ்டிக்கை நீக்கும் 7 வயது சிறுமி.  சென்னை, காட்டுப்பாக்கத்தில் வசிக்கும், ஸ்கூபா டைவிங் பயிற்சியாளரின், ஏழரை வயது மகள் தான் தாரகை ஆராதனா.  இவர் பிறந்த 3 நாளிலேயே அவரை, தண்ணீர் தொட்டியில் வைத்து பழக்கப்படுத்தியதால், தற்போது கடலுக்குள் குட்டி கடல் கன்னியாக வளம் வருகிறார். இந்நிலையில், ஸ்கூபா டைவிங் உடையுடன், செயற்கை சுவாச கருவியுடன் கடலுக்கு 7 மீட்டர் ஆழம் வரை செல்கிறார். இவர் கடலுக்கு மாசை … Read more

அலையில் சிக்கிய மகள்., காப்பாற்றச் சென்ற தந்தை., கரை ஒதுங்கிய சடலம்!

கடல் அலையில் சிக்கிய தனது மகளை காப்பாற்ற சென்ற தந்தையின் உடல் கரை ஒதுக்கியது பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை திருவான்மியூர் கடலில் சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்த 11 வயது மகளை கரையில் இருந்து தந்தை பாலாஜி கவனித்துக் கொண்டிருந்தார். அப்போது, தனது மகள் ராட்சத அலையில் சிக்கியதை கண்ட தந்தை காப்பாற்ற சென்றுள்ளார். கடலில் தத்தளித்த அந்த 11 வயது சிறுமியை மீனவர்கள் கடும் போராட்டத்தில் மீட்டனர். ஆனால், மகளை காப்பாற்ற சென்ற தந்தை ராட்சத அலையில் … Read more

இலங்கையில் கூட்டம் கூட்டமாக கரை ஒதுங்கிய திமிங்கலங்கள்- வைரல் வீடியோ உள்ளே!

இலங்கையில் கூட்டம் கூட்டமாக கரை ஒதுங்கிய திமிங்கலங்களால் அங்குள்ள மக்கள் கடலின் அசாதாரண சூழ்நிலை காரணமாக இருக்குமோ என அச்சம் தெரிவிக்கின்றனர்.  பொதுவாக கடல் வாழ் உயிரினங்கள் வழி தவறுவதாலோ அல்லது கடலில் ஏற்படக்கூடிய மாறுபட்ட சூழ்நிலை காரணமாகவோ கரை ஒதுங்குவது அல்லது இறந்து கூட்டமாக கடல் நீரால் அடித்து கரைக்கு கொண்டுவரப்படுவது வழக்கம். இந்நிலையில் இலங்கையில் உள்ள கொழும்பு கடற்கரையில் கடந்த சில தினங்களாக கூட்டம் கூட்டமாக திமிங்கலங்கள் கரை ஒதுக்கியுள்ளது. உயிருடன் கரை ஒதுங்கியதால் மக்கள் … Read more

2 வருடங்களுக்கு பிறகு கடலில் உயிருடன் மிதந்து வந்த காணாமல் போன பெண்மணி!

2 வருடங்களுக்கு பிறகு கடலில் உயிருடன் மிதந்து வந்த காணாமல் போன பெண்மணியை காப்பாற்றிய மீனவர்கள். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பதாக கொலம்பியாவை சேர்ந்த ஏஞ்சலிகா கெய்டன் எனும் பெண்மணி காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் கடந்த சனிக்கிழமை மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் கடலில் ஏதோ கட்டை போன்ற ஒன்று மிதந்து வருவதை பார்த்துள்ளனர். அருகில் வரும் வரைக்கும் அது ஏதோ கட்டை போல என்று தான் நினைத்துள்ளனர். ஆனால் உதவிக்காக அவள் லேசாக கை … Read more

கடலுக்குள் சுறாவிடம் சிக்கிய கணவரை காப்பாற்றிய கர்ப்பிணி பெண்!

அமெரிக்காவில் கடலுக்குள் சுறாவிடம் சிக்கிய கணவரை காப்பாற்றிய கர்ப்பிணி பெண். அமெரிக்காவில் உள்ள புளோரிடாவில் தனது கர்ப்பிணி மனைவியுடன் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆண்ட்ரூ என்பவரும், அவர்களின் குடும்பத்தினரும் பயணம் மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் ஆண்ட்ரூ படகில் பயணம் செய்து கொண்டிருந்த பொழுது திடீரென சறுக்கி தண்ணீரில் விழுந்த பொழுது கடலுக்குள் இருந்த சுறாவின் தோளில் அவர் நேரடியாக சென்று விழுந்துள்ளார். சற்று நேரத்திலேயே சுறாவால் அவர் லேசாக தாக்கப்பட்டதால், அவரது ரத்தம் கசிந்து தண்ணீரில் தெரிய … Read more

மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க அனுமதி.! அமைச்சர் ஜெயக்குமார்.!

தமிழ் நாட்டின், கிழக்கு கடற்கரைப்பகுதி விசைப்படகு மீனவர்கள் ஜூன் 1-ம் தேதி முதல் மீன்பிடிக்க செல்லலாம் என ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.  கொரோனா வைரஸ் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே  உள்ளது . தற்போது 4 கட்டங்களாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு காரணமாக மீன்பிடி விசைப் படகுகள், எந்திரம் பொருந்திய மற்றும் இயந்திரம் பொருத்தப்பட்ட படகுகள் ஆகியவை அனைத்தும்  மீன் பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.   கடந்த மார்ச் மாதம் அறிவிப்பு ஒன்று மத்திய அரசு அறிவித்தது. அதில் கிழக்கு கடற்கரையில் ஏப்ரல் … Read more

எச்சரிக்கை.! மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் .!

வங்கக்கடலில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலமாக  காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தமான் வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது. நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாகி பின்னர் ஆம்பன் புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், வங்கக்கடலில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலமாக  காற்று வீசும் என்பதால் மீனவர்கள் … Read more