உலகளவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு பெங்களூரு விமான நிலையத்திற்கு வரும் சர்வதேச பயணிகளுக்கு கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. “உலகளாவிய சூழ்நிலையை அடுத்து நாங்கள் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என்று கர்நாடக சுகாதார அமைச்சர் சுதாகர் கே கூறினார், மேலும் புதிய கொரோனா வழிகாட்டுதல்களும் வெளியிடப்படும் என்று கூறினார். மேலும் ,பயணிகளின் பரிசோதனை எப்போது தொடங்கும் என்பதை அவர் குறிப்பிடவில்லை.